September 19, 2019
  • September 19, 2019
Breaking News

Currently browsing முக்கிய செய்திகள்

புதிய கல்விக் கொள்கை குறித்து கமல் எதிர்ப்பு வீடியோ

by by Sep 18, 2019 0

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கல்வி முறை குறித்து கமல் இன்று தன் மக்கள் நீதி மய்யம் தொடர்பாக வெளியிட்டுள்ள புதிய வீடியோ…


 

Read More

குற்றவாளி ஓடி ஒளிய முடியாது – சுபஸ்ரீ வீட்டில் கமல் வீடியோ

by by Sep 15, 2019 0

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை இன்று மாலை சந்தித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் கூறினார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “பேனர் கலாச்சாரத்தை ஒழியுங்கள்… அப்படி ஒழிக்கவில்லை என்றால் மக்களே அதனை ஒழிப்பார்கள். அதற்கு மக்கள் நீதி மன்றம்’ துணை நிற்கும்..!” என்றார்.
 
ஸம்பவம் தொடர்பாக…

Read More

சுபஸ்ரீ எப்படி பலியானார் – சிசிடிவி காட்சிகள்

by by Sep 13, 2019 0

சென்னைவாசிகளை நேற்று உலுக்கிய பயங்கர விபத்து அது. பல்லாவரம் அருகே சுபஸ்ரீ என்ற இளம்பெண் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததில் நிலைகுலைந்து பின்னால் வந்த தண்ணீர் டேங்கர் லாரியில் சிக்கி உயிரிழந்தார்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணை நடத்தியது. சட்டவிரோத பேனர்கள் தொடர்பாக அரசுக்கும் அதிகாரிகளுக்கும் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள்…

Read More

நள்ளிரவில் சாலையில் விழுந்த குழந்தை வைரல் வீடியோ

by by Sep 9, 2019 0

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜமாலா வாகனச் சோதனை சாவடிக்கு அருகே நடந்த ‘திக் திக்’ சம்பவம் இது. மிக அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் நெடுஞ்சாலையில் அந்த சம்பவம் நடந்தது. இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
 
சோதனைச் சாவடி அருகே கடக்கும் ஒரு காரிலிருந்து குழந்தை ஒன்று கீழே விழ, அந்த கார் சென்று விடுகிறது. அதிர்ஷ்டவசமாக, வாகனத்தில் இருந்து…

Read More

லொஸ்லியாவை வைத்து சேரனின் மாஸ்டர் பிளான்

by by Sep 5, 2019 0

சமூகத்துக்குத் தேவையற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. அதில் சேரன் என்ற நல்ல இயக்குநரும் சிக்கினாரே என்ற கவலைதான் பல ஆரோக்கிய சிந்தனையாளர்களுக்கும்.

ஆனால், அவர் பட்ட கடன்களை அடைக்கவே அப்படி முடிவெடுத்தார் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அதிலிருந்து மதுமிதா வெளியே வந்தவுடனேயே அந்நிகழ்ச்சிக்கு எத்தனை லட்சங்கள் பணப்பட்டுவாடா நடந்து வருகிறது என்ற விஷயம் அதிகாரபூர்வமாகவே ஊர் உலகுக்குத் தெரிந்தது. 

70 நாள்கள் கடந்துவிட்ட நிலையில் சேரனே பிக்பாஸ் படத்தை வென்றால் மிகப்பெரிய தொகை அவர்…

Read More

விஜய் படங்கள் இயக்குநரின் வேதனைப் பதிவு

by by Aug 27, 2019 0

விஜய்யை வைத்து ‘திருமலை’, ‘ஆதி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ரமணா (சந்திரசேகர்) புற்றுநோய் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்க்கையுடன் போராடி வருகிறார். இந்நிலையில் அதைக் காரணப்படுத்தியே போக்குவரத்து போலீசார் தன்னை தரக்குறைவாக நடத்தியதாகவும், அதிகார மீறலில் ஈடுபட்டதாகவும் வேதனைப்பட்டு தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு கீழே…
 
“கண்ணியம் மிக்க சட்டம் மற்றும் காவல்துறை மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு….

Read More

விஐபி ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை

by by Aug 16, 2019 0

ஹேர் ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக, அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக உருவாகியுள்ளது விஐபி ஹேர் கலர் ஷாம்பூ. இந்த புதிய தயாரிப்பை கண்டுபடித்தது சாட்சாத் ஒரு சினிமா நடிகர் என்றால் நம்ப முடிகிறதா..? ஆம்.. எல்லாம் அவன் செயல் படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் ஆர்கே தான் இதனைக் கண்டுபிடித்துள்ளார்.

வெற்றிகரமான தொழிலதிபர் என்கிற இன்னொரு முகமும் இவருக்கு இருக்கிறது.

இவரது புதிய கண்டுபிடிப்பான விஐபி…

Read More

நேர் கொண்ட பார்வைக்கு நெல்லை டெபுடி கமிஷனர் வாழ்த்து

by by Aug 12, 2019 0

படத்தை திரைப்பட விமர்சகர்கள் பாராட்டுவதற்கும், ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநர்கள் பாராட்டுவதற்கும் வித்தியாசம் உண்டு. அப்படி கடந்த வாரம் அஜித் நடிப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை பற்றிய தன் கருத்துகளை தன் முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் நெல்லை போலீஸ் டெபுடி கமிஷனர் திரு. அர்ஜுன் சரவணன்.
 
அத்துடன் காவல்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆற்றும்…

Read More

ஆவின் பால் விலை விரைவில் உயர்கிறது

by by Aug 2, 2019 0

பொது மக்களால் அதிக அளவு பயன்படுத்தப்படும் பாலை விற்பனை செய்யும் தமிழக அரசின் ஆவின் நிறுவனம் தினசரி 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. ஆவின் பால் விலையை கடந்த 2014-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா லிட்டருக்கு ரூ.10 உயர்த்தினார். அதன்பின் ஐந்து ஆண்டுகளாக பால் விலை உயர்த்தப்படவில்லை.

ஆனால் பால் உற்பத்திக்கான செலவு பட மடங்கு உயர்ந்துள்ளதாகவும், தீவனம் விலை அதிகரித்துள்ளதால் மாடுகளைப் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பால் உற்பத்தியாளர்கள்…

Read More

சரவண பவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

by by Jul 18, 2019 0

சரவண பவன் ஓட்டல்களின் உரிமையாளர் ராஜகோபால் தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 74.

முன்னதாக, சரவண பவன் ராஜகோபாலுக்கு பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட, உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த 9-ம் தேதி நீதிபதியின் முன் ராஜகோபால் ஆஜராகினார். அப்போது நீதிபதி அவரைப் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஆனால் சிறைக்கு செல்லும் போதே ராஜகோபாலின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

அதனால், ஸ்டான்லி…

Read More