November 26, 2022
  • November 26, 2022
Breaking News

Currently browsing அரசியல்

பிரதமர் வழங்கிய பணி நியமனங்கள் தேர்தல் ஸ்டண்ட் – மல்லிகார்ஜுன கார்கே

by by Nov 22, 2022 0

மத்திய அரசின் வேலைவாய்ப்பு கண்காட்சியை இன்று தொடங்கி வைத்த பிரதமர் மோடி 71,056 பேருக்கு காணொலி காட்சி மூலமாக பணி நியமன கடிதங்களை வழங்கினார். நாடு முழுவதும் 45 இடங்களில் இந்த கடிதங்கள் வழங்கப்பட்டன. இது குறித்து காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை தேர்தல் ஸ்டண்ட் என்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். தமது டுவிட்டர் பதிவில் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைகள் வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்ததை அவர்…

Read More

கல்லூரி மாணவ மாணவியருக்கு காலைச் சிற்றுண்டி – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

by by Nov 16, 2022 0

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கும், காலை சிற்றுண்டி திட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி பழனி தண்டாயுதபாணி சாமி கோவில் கட்டுப்பாட்டின் கீழ் பழனியாண்டவர் கலைகல்லூரி, மகளிர் கல்லூரி, சின்னகலையம்புத்தூர் கல்லூரி, மெட்ரிக் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இதுதவிர ஒட்டன்சத்திரத்தில் அரசு கல்லூரியும் செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரிகளில்…

Read More

அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்குக : தமிழ்நாடு முஸ்லிம் லீக்

by by Oct 29, 2022 0

நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை :

கடலூரில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய கருத்து குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். இதனால் கடும் ஆவேசம் அடைந்த அண்ணாமலை, “மரத்து மேல குரங்கு தாவுகிற மாதிரி சுத்தி சுத்தி வரீங்க. ஊர்ல நாய், போய், சாராயம் விற்கிறவன் எல்லாம் கேட்கிறதுக்கு நான் பதில் சொல்லணுமா? நகருங்க” என்று கோபமாக கூறிவிட்டுச் சென்றார்.

பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சென்றதோடு, அவர்களை…

Read More

ஜெ மரணம் – சசிகலா, விஜயபாஸ்கரை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பரிந்துரை

by by Oct 18, 2022 0

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 22.09.2016 அன்று திடீர் உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில் அவர் சிகிச்சை பெறும் புகைப்படங்களோ, முக்கிய தலைவர்கள் யாரும் அவரை பார்த்தது போன்ற புகைப்படங்களோ வெளியாகவில்லை.

அவர் ஆஸ்பத்திரியில் இருந்த போது நலமாக இருக்கிறார். ஜூஸ் குடித்தார். இட்லி சாப்பிட்டார். நடைபயிற்சி செய்தார் என்று தகவல்கள் வெளியிடப்பட்டன. ஆனாலும் அது தொடர்பான புகைப்படங்கள் வெளிவரவில்லை.

இந்த நிலையில் 5.12.2016…

Read More

அங்கீகாரம் பெறாத 86 கட்சிகளை பட்டியலிலிருந்து தேர்தல் ஆணையம் நீக்கியது

by by Sep 14, 2022 0

6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. .

நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன.

இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 2,796 கட்சிகளில் 623 கட்சிகள் மட்டுமே கடந்த 2019 மக்களவை தேர்தலில் களமிறங்கின.

இந்நிலையில், கட்சிகள் மீது எழுந்த பல்வேறு புகார்களை அடுத்து உரிய விசாரணை நடத்தி அதனடிப்படையில் பல்வேறு மாநிலங்கள், யூனியன்…

Read More

நீட் விலக்கு பற்றிய எம்பி வெங்கடேசன் கேள்விக்கு மத்திய இணை மந்திரி பதில்

by by Jul 20, 2022 0

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி தமிழக சட்டசபையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக, ஆளுநர் மூலம், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் பாராளுமன்ற மக்களவையில் பேசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், தமிழகம் நிறைவேற்றி உள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் வழங்கப்படும் என கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

அதில், தமிழக ஆளுநர் பரிசீலனைக்காகவும், குடியரசுத் தலைவர்…

Read More

எம்பி ஆன இளையராஜாவுக்கு பிரதமர், கமல், ரஜினி உள்ளிட்டோர் வாழ்த்து

by by Jul 6, 2022 0

நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகள் உள்ளன.

இதில், ராஜ்யசபா என்றழைக்கப்படும் மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 250 எம்பி-களில் 12 பேரை குடியரசுத் தலைவர் நியமிக்கும் அதிகாரம் உண்டு.

இந்திய நாட்டில் “அறிவியல், விளையாட்டு, கலை, இலக்கியம்” உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேரை பிரதமர், அமைச்சர்கள் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் நியமிப்பார்.

அதன்படி, தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவும், ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷாவும் மாநிலங்கவையில் நியமன எம்.பிக்களாக இன்று ஆயினர்.

இது தொடர்பாக தமது…

Read More

அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் – மா.சுப்ரமணியன்

by by Jun 21, 2022 0

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 75 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்க ராசிபுரம் தாலுகா போதமலையில் உள்ள கெடமலைக்கு சென்றார்.

முன்னதாக ஆயில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஜம்புத்துமலை பகுதிக்கு காரில் சென்றார். பின்னர் அங்கிருந்து கெடமலைக்கு சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடை பயணமாக சென்றார். ஜம்புத்து மலையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

“ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில்…

Read More

பத்து மாதங்களில் புதிய தொழிற் சாலைகள் வேலை வாய்ப்புகள் – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

by by Apr 19, 2022 0

தமிழக சட்டசபையில் இன்று தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி.முனுசாமி பேசும்போது, ‘தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் என்னென்ன’ என்பது குறித்து கேள்வி எழுப்பியதுடன் அ.தி.மு.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தொழில் முதலீடுகள் பற்றியும் விளக்கி பேசினார்.