விவசாயத்தின் அருமை உணரப்பட வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் நாம் வசிக்கிறோம். அதனை ஊடகங்கள் மட்டுமே மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
ஆதிலும் வெகுஜன ஊடகமான சினிமாவில் சொன்னால் மட்டுமே எந்த செய்தியும் அதிகமாகக் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்க, அதைத் தன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பூமராங்’ படத்தில் இன்றைய காலநிலைமைக்கேற்ப சொல்லியிருக்கிறார் ஆர்.கண்ணன்.
இதில் முக்கியமான விஷயம், இந்தப் படத்தை ஆர்.கண்ணனே தன் மசாலா பிக்ஸுக்காகத் தயாரித்திருக்கிறார் என்பது. கமர்ஷியலாக ஒரு படம் எடுத்தோமா, காசு பார்த்தோமா என்றில்லாமல் அதில் சமுதாயத்துக்கு நல்ல கருத்தைச் சொல்ல முயற்சித்த அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
படத்தை எடுப்பதே அதிகபட்ச சவால் என்றால் அதைத் தியேட்டர்களுக்குக் கொண்டு சேர்ப்பது அதை மிஞ்சிய சவால். அதையும் சரியாகத் திட்டமிட்டு, தயாரிப்பாளர் சங்கத்தில் வெளியீட்டு அனுமதி பெற்று எதிர்வரும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குத் தக்கவாறு டிசம்பர் 21ம்தேதி வெளியிடவிருக்கிறார் கண்னன்.
அதர்வா முரளி, மேகா ஆகாஷ், ஆர்.ஜே.பாலாஜி, இந்துஜா, சதீஷ் இவர்களுடன் சமுத்திரக்கனியும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் இந்தப்படத்தில் ரதன் இசையில் அமைந்த பாடல்கள் பரவலான வெற்றியைப் பெற்றிருக்கின்றன.
காலமறிந்து கூவும் சேவல் கண்ணன்..!