January 5, 2026
  • January 5, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • புளூ சட்டை மாறன் படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்தது
October 23, 2019

புளூ சட்டை மாறன் படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்தது

By 0 807 Views

சினிமா தயாரிப்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பதாகக் கருதப்படுபாவை புளூ சட்டை மாறனின் யு டியூப் விமர்சனங்கள்.

இந்நிலையில் அவரே ஒரு படத்தை இயக்குவதாக செய்தி வந்ததும் திரையுலகமே அசந்து போனது.

அப்படத்தை தயாரிப்பவர் திரையுலகின் பரபரப்பான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என்றதும் பிரச்சினையைக் கிளப்ப நினைத்தவர்கள் அடங்கிப் போனார்கள்.

சரி…. படம் வெளியானதும் புளூ சட்டையை வெளுத்துவிடலாம் என்று சகலரும் காத்துக் கிடக்க, தன் படத்தின் முதல் ஷெட்யூளை அதிரடியாக முடித்து விட்டார் மாறன்…

சீக்கிரம் முழுப் படத்தையும் முடிங்க சார்… நாங்க பாத்தாகனும்…