January 16, 2025
  • January 16, 2025

நீட் எழுத வெளிமாநிலம் செல்வோருக்கு பயணத்தொகையுடன் ரூ.1000 – தமிழக அரசு

by on May 4, 2018 0

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதிக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இந்த நுழைவுத் தேர்வை மத்திய கல்வி வாரியம் நடத்துகிறது. இதில் பங்கேற்க விண்ணப்பித்த தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது மாநில அளவில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் […]

Read More

அருள்நிதியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் படம்

by on May 4, 2018 0

உலகமெங்கும் மே 11ஆம் தேதி வெளியாகும் த்ரில்லர் படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. அருள்நிதி, அஜ்மல், மஹிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, மு மாறன் இயக்கியிருக்கும் ‘இந்தப் படத்தின் முதல் ரசிகன் படத்தின் தயாரிப்பாளர் ‘ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லி பாபு’தான். படத்தைப் பற்றி மகிழ்ச்சியோடு இப்படிப் பகிர்ந்து கொள்கிறார் அவர். “முதலில் இயக்குனர் மு. மாறன் கதை சொன்னதைக் கண்டு வியந்தேன். சொன்ன கதையை திரையில் காட்சிகளாக சிறப்பாகக் கொண்டு வந்ததிலும் மகிழ்ச்சி. […]

Read More

உச்சநீதிமன்ற உத்தரவு – கர்நாடக முதல்வர் கைவிரிப்பு

by on May 3, 2018 0

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்ததைத் தொடர்ந்து வரைவு செயல் திட்டம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் இன்று காவிரி செயல் திட்டம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால், மத்திய அரசு சார்பில் வரைவு செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. வரைவு செயல் திட்டத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற முடியவில்லை என்று […]

Read More

பொறியியல் கலந்தாய்வுக்கு ஆன்லைன் பதிவு தொடக்கம்

by on May 3, 2018 0

தமிழகத்தில் பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுவது இதுவரை நடைமுறையில் இருந்தது. இந்த வருடம் முதலாக ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது. அதன்படி இன்று (மே 3) முதல் இன்ஜினியரிங் கவுன்சிலிங் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் மாணவர்கள் www.annauniv.edu/tnea2018 எனும் […]

Read More

சிவகார்த்திகேயன் ஞானவேல்ராஜா ராஜேஷ் கூட்டணி

by on May 2, 2018 0

இதுவரை ஹீரோ சிவகார்த்திகேயன், ஸ்டுடியோக்ரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா, இயக்குனர் எம்.ராஜேஷ் ஆகியோர் தங்களது பணியில் முழுக்க பொழுதுபோக்கு படங்களை வெற்றிகரமாக வழங்கியவர்கள். தற்போது இந்த மூவரும் ஒரு படத்தில் இணைவது ட்ரிபிள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமையப் போகிறது. யெஸ்… ஸ்டுடியோக்ரீன் ‘நம்பர் 9’ தயாரிப்பில் தற்போதைக்கு, சிவகார்த்திகேயன் 13வது படம் ‘#SK13’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் பூஜையுடன் இன்று துவங்கியது. இது பற்றி தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா கூறும்போது, “ராஜேஷ், சிவகார்த்திகேயன் போன்றவர்கள் ஒரு படத்தில் இணையும்போது, அந்தப் […]

Read More

கண் கலங்கிய பாண்டியராஜன்… ஃபீல் ஆன பாக்யராஜ்

by on May 2, 2018 0

இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் கதை, திரைக்கதை இயக்கத்தில் ‘ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்ஷன்ஸ்’ ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் `தொட்ரா’. . பாண்டியராஜன் மகன் பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ள இந்தப்படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்பராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். உத்தமராஜா இசையமைத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘தொட்ரா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ஏ.வெங்கடேஷ், ​மீரா […]

Read More

காவிரிப் படுகையில் துணை ராணுவப் படையை திரும்பப் பெற வேண்டும் – சீமான்

by on May 1, 2018 0

காவிரி டெல்டா பகுதியில் குவிக்கப்பட்டுள்ள துணை ராணுவத்தை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து… “தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப் படுகையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோகார்பன் எடுப்பு, மீத்தேன் எடுப்பு,ஷெல் எரிவாயு எடுப்பு போன்ற பேராபத்துமிக்க திட்டங்களைப் புகுத்தி காவிரிப் படுகை மாவட்டங்களை பாலைவனமாக்க சதித்திட்டம் தீட்டி மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. தற்போது காவிரிப் படுகை நிலப்பகுதிகளில் சி.ஆர்.பி.எப். எனப்படும் […]

Read More

மதுரை வங்கியில் பட்டப்பகலில் 10 லட்சம் கொள்ளை

by on May 1, 2018 0

மதுரை விளக்குத்தூண் பகுதியில் கிழக்கு ஆவணி மூலவீதியில் இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகமும், கிளை அலுவலகமும் இயங்கி வருகின்றன. அத்துடன் முதல் தளத்தில் கிளை அலுவலகமும் இயங்கி வருகிறது. இந்நிலையில் இங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கான பிரிவுபசார விழா 4-வது மாடியில் நடக்க, அதில் பங்கேற்பதற்காக ஊழியர்கள் அனைவரும் சென்றிருந்தனர். காசாளரும் கேபினை பூட்டி விட்டு சென்று விட்டார். இதைப் பயன்படுத்தி ஒரு மர்மநபர் வங்கிக்குள் புகுந்து, கேபினுக்கு மேல் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு இருந்த […]

Read More
CLOSE
CLOSE