January 15, 2025
  • January 15, 2025

மிஸ்டர் சந்திரமௌலி மொபைல் ஆப்பில் விளையாடி பரிசு பெறுங்கள்

by on June 26, 2018 0

இந்தியாவிலேயே முதல் முறையாக மிஸ்டர் சந்திரமௌலி படத்துக்காக புதிய ‘மொபைல் ஆப்’ உருவாக்கப்படுள்ளது. மற்ற திரைப்பட ஆப்களில் உள்ள விளையாட்டுகளைப் போல் அல்லாமல், சந்திரமௌலி படத்தை புரமோட் செய்வதற்காக படத்தைப் பார்த்த டிக்கெட் வைத்தோ, அதன் டிக்கெட்டை வெல்லவோ அல்லாமல் பொது மக்கள் யாரும் விளையாடி இதில் மொபைல் போன் முதல் திரையடங்களின் டிக்கெட் வரையில் நிச்சயப் பரிசுகளைப் பெறலாம். இந்த ‘மொபைல் ஆப்’பை மிஸ்டர். சந்திரமௌலி பட நாயகன் கௌதம் கார்த்திக், நாயகி ரெஜினா காசென்ட்ரா, […]

Read More

பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க பாஜக புதிய வியூகம்

by on June 25, 2018 0

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக பா.ஜ.க உள்பட அனைத்து அரசியல் கட்சிக்ளுமே தீவிரமாக திட்டம் தீட்ட ஆரம்பித்துள்ளன. இவற்றில் ஆளும் கட்சியாக உள்ள பாரதிய ஜனதா தங்கள் ஆட்சியைத் தக்கவைக்க புதிய வியூகத்துடன் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக பா.ஜ.கட்சியின் தலைவர் அமித்ஷா கடந்த 10-ந்தேதி சத்தீஸ்காரில் தொடங்கி நாடெங்கும் மாநில வாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பா.ஜ.க வகுத்துள்ள புதிய வியூகங்களின் ஹைலைட்… ⦁ ஒவ்வொரு […]

Read More

விபத்தில் சிக்கி 3 வார சிகிச்சையில் விஜய் வசந்த்

by on June 24, 2018 0

விஜய் வசந்த் நடிக்க, ரஞ்சன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் திகில் படமான ‘மை டியர் லிசா’ படப்பிடிப்பு ஊட்டியில் விறு விறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. விஜய் வசந்த் ரவுடிகளுடன் மோதும் சண்டை காட்சி படமாகிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது கால் பள்ளத்தில் சிக்கியதால் தடுமாறி கீழே விழுந்தார். அவரது கால் மீது முழு உடம்பும் அழுத்தியதால் கால் வலியால் துடித்தார். உடனடியாக ஊட்டியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட விஜய் வசந்துக்கு உடனடியாக முதல் உதவி […]

Read More

பிக் பாஸ் 2 விவகாரம் – பெப்ஸி போராட்ட அறிவிப்புக்கு கமல் ஒத்துழைப்பாரா?

by on June 24, 2018 0

இப்போது எண்டமால் நிறுவனம் தயாரித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் பெப்ஸி தொழிலாளர்கள் குறைந்த அளவே பயன்படுத்தப்படுவதால் அவர்களை நிறுத்திக் கொண்டு இதன்மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று ‘பெப்ஸி’ அறிவித்துள்ளது. இது தொடர்பாக பெப்ஸி கூட்டமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது… “பிக் பாஸ் முதல் சீசன் நடந்தபோதே அதில் பெப்ஸி தொழிலாளர்களை வேலைக்கு வைக்காமல் மும்பை தொழிலாளர்களை வைத்தே வேலைகள் […]

Read More

100-ல் நான்கைந்து பேர்தான் 8 வழிச்சாலைக்கு நிலம் தர மறுக்கின்றனர் – முதல்வர்

by on June 24, 2018 0

சென்னையிலிருந்து சேலத்துக்கு பசுமை வழிச்சாலையாக எட்டுவழிச்சாலை அமைக்க அரசால் தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு எதிராக விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக எதிர்ப்புகளைக் காட்டி வருகின்றனர். ஆனாலும், நிலம் கையகப்படுத்தும் பணிகளும், கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு கற்கள் நடும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், சேலம் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதிலிருந்து… “சென்னை – சேலம் விரைவு […]

Read More

டிராஃபிக் ராமசாமி விமர்சனம்

by on June 23, 2018 0

அப்போதெல்லாம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனைச் சொல்லும்போது ‘சட்டத்தைக் கையில் எடுத்து வைத்து விளையாடுபவர்’ என்பார்கள். அப்படித்தான் அவர் படங்களில் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாகப் போட்டு விளையாடுவார். அப்படிப்பட்ட அவரையே ஒரு கையிலும், சட்டத்தை இன்னொரு கையிலுமாக எடுத்து ‘ஜக்ளிங்’ விளையாட்டு விளையாடித் தள்ளியிருக்கிறார் அவரிடமே சினிமா பயின்ற விக்கி. வாழும் உதாரணமாக இருக்கக் கூடிய சமூகப் போராளி ‘டிராஃபிக் ராமசாமி’யின் வாழ்க்கையை ஆவணப் படுத்த வேண்டுமென்றால் எவ்வளவு பொறுப்புடனும், கவனமாகவும் அந்த முயற்சியை மேற்கொண்டிருக்க […]

Read More

ஆந்திரா மெஸ் விமர்சனம்

by on June 23, 2018 0

படத்தின் ஒன்லைன் என்ன என்று கேட்டால் இந்தப்பட டைரக்டர் ஜெய் என்ன பதில் சொல்வாரோ தெரியாது. ஆனால், நாம் புரிந்து கொண்டது, “யார் எப்படி நினைக்கிறீர்களோ, அப்படி வாழுங்கள்…” என்பதாகத்தான் இருக்கும். பணம் சம்பாதிக்க வக்கில்லாமல் காதலியால் கைவிடப்படும் ஏ.பி.ஸ்ரீதர், எப்படியாவது சம்பாதிக்க ஆசைப்பட்டு நண்பர்கள் ராஜ் பரத், மதி, பாலாஜியுடன் பெரும்பணம் அடிக்கும் அசைன்மென்ட்டை ஒத்துக்கொண்டு அதையும் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்காமல் லவட்டிக்கொண்டு காட்டில் ஒரு ஜமீன் தோட்டத்தில் அடைக்கலமாகிறார். பின்னர் என்ன நடந்தது […]

Read More

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன் – கமல்

by on June 22, 2018 0

தனது கட்சியான ‘மக்கள் நீதி மய்யம்’ பதிவு தொடர்பாக நேற்று முன்தினம் டெல்லி சென்ற கமல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும், நேற்று காலையில் சோனியா காந்தியை சந்தித்ததும் எதிர்பாராத நிகழ்வுகளாக அமைந்தன. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்துச் செயல்பட கமல் திட்டமிட்டிருப்பதாக அரசியல் நோக்கர்களால் மேற்படி சந்திப்புகள் கருதப்பட, டெல்லியில் இருந்து நேற்று இரவு சென்னை திரும்பிய கமல், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதிலிருந்து… “ராகுல் காந்தி, சோனியா இருவரையும் மரியாதை நிமித்தமாகவே […]

Read More

இங்கிலாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் குழுவுக்கு நல்ல தகவல் வருமா?

by on June 22, 2018 0

எங்களுக்கு சம்பள உயர்வு இன்னும் கைக்கு வரவில்லை என்று கவலைப்படுபவர்களா நீங்கள்..? இதே கவலைதான் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் என்றால் நம்புவீர்களா..? ஆனால், அதுதான் உண்மை. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை நிர்வகித்து வரும் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வினோத் ராய் தலைமையிலான நிர்வாக கமிட்டி இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஊதிய உயர்வை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. ஆனால், கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பு நிர்வாகிகள் செலவினங்களை குறைக்க விரும்புவதாகவே கூறப்பட்டது. இன்னும் உயர்த்தப்பட்ட […]

Read More
CLOSE
CLOSE