January 21, 2025
  • January 21, 2025

சிந்துபாத் செட்டில் மகனுடன் மோதிய விஜய்சேதுபதி வீடியோ

by on March 20, 2019 0

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமாரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக நடிக்கும் படம் சிந்துபாத். அஞ்சலி இந்தப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாகிறார். இந்தப்படத்தின் ஹைலைட் இதில் விஜய் சேதுபதியுடன் அவர் மகனான சூர்யா விஜய்சேதுபதியும் நடிப்பதுதான். (சூர்யா ஏற்கனவே நானும் ரௌடிதான் படத்தில் நடித்திருந்தார்…) படத்தின் செட்டில் விஜய் சேதுபதி விளையாட்டாக தன் மகனுடன் மோதிக்கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது. வைரலான அந்த வீடியோ கீழே… 

Read More

உலகமயமாக்கலை உள்ளடக்கி ஒரு தமிழ்ப்படம்

by on March 19, 2019 0

 உலகமயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படமாக ‘குச்சி ஐஸ் ‘ என்கிற  படம் உருவாகிறது.   பாரதிராஜாவின் உதவி இயக்குநர் ஜெயப்பிரகாஷ் .வி இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘சாதிசனம்’ , ‘காதல் fm’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கும் மூன்றாவது படம் இது. திருமலை சினி டிரஸ்ஸஸ் நிறுவனம் சார்பில் ஜெயபாலன் தயாரிக்கிறார்.    ‘நாடோடிகள்’ மற்றும் விஜய் டிவியின்  பிக்பாஸ் புகழ் பரணி, புதுமுகம் ரத்திகா,மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடிக்க உள்ளனர். […]

Read More

நெடுநல்வாடை திரைப்பட விமர்சனம்

by on March 19, 2019 0

இன்றைய நகரத்துப் பின்னணி கொண்ட வாழ்க்கையில் தாத்தா பாட்டி உறவுகளெல்லாம் அர்த்தமற்றுப் போய்விட… ஏன் அறிமுகமில்லாமலேயே போய்விட, தமிழ்க்குடியின் அத்தியாவசிய உறவாக அமைந்த மூன்றாம் மூத்த உறவின் பெருமையைச் சொல்லியிருக்கிறது இந்தப்படம். கூடவே எந்த உறவுகளும், உறவு மறுப்புகளும் குடும்ப உறுப்பினர்களின் நன்மைக்காக மட்டுமே என்ற கருத்தையும் ஆழமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் செல்வக்கண்ணன். கிராமத்து வாழ்க்கையில் பெரும்பாலும் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு பாட்டி தாத்தாமார்களுக்கே இருக்கிறது. அப்படி பாட்டிக்கும், பேத்திக்குமான ஒரு உறவை கடந்த தலைமுறையில் ‘பூவே […]

Read More

கிரிஷ்ணம் திரைப்பட விமர்சனம்

by on March 18, 2019 0

பக்திப்படங்கள் வருவது அருகிவிட்ட இக்காலத்தில் மீண்டும் கடவுள் பக்தி கொண்டவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட நவீனப் படம். வழக்கமாக பக்திப்படம் என்றாலே அது கற்பனைக் கதைகளை அடியொற்றிதான் இருக்கும். யாரோ சொன்னது, யாருக்கோ நடந்தது என்கிற அளவிலேயே அவை தயாரிக்கப்படும். ஆனால், தன் வாழ்வில் நடந்த… இன்னும் சொல்லப்போனால் தன் மகனுக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை அப்படியே படமாகத் தயாரித்திருக்கிறார் பி.என்.பலராம். இதுவே இந்தப்படத்தின் மீதான நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம். அத்துடன் அப்படித் தயாரான படத்தில் தன் மகனையே ஹீரோவாக்கியிருப்பதும் உலக […]

Read More

கபடி வீராங்கனைகளுக்கு பாரதிராஜா வீட்டில் விருந்து

by on March 17, 2019 0

நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் ‘கென்னடி கிளப்’.   இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் நடத்தப்பட்டது. அதேபோல் தமிழகத்திலும் பல ஊர்களிலும் நடத்தப்பட்டு வந்தது. இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளுக்காக விழுப்புரத்தில் பிரம்மாண்டமான தளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் நிஜ வீராங்கனைகளும் நடித்தனர்.   பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். மார்ச் 14-ம் தேதியுடன் பாரதிராஜாவின் பகுதி முடிவடைந்த […]

Read More

நெடுநல்வாடை இயக்குநருக்கு என்ன பரிசு கொடுக்க – 50 தயாரிப்பாளர்கள் யோசனை

by on March 17, 2019 0

முற்றிலும் புதுமுகங்களே நடித்துள்ள ‘நெடுநல்வாடை’ படம் விமர்சன ரீதியாகவும் வசூலிலும் சூப்பர் ஹிட்டடித்துள்ளது. இச்செய்திக்கு இன்னும் சிறப்பு சேர்க்கும் வகையில் வட இந்திய இணையதளம் ஒன்று இப்படத்தை இந்தியாவின் இந்த வார சிறந்த படம் என்று அறிவித்துள்ளது.   இந்தியாவில்  இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் வங்க மொழி  ஆகிய 5 மொழிகளில் ஒவ்வொரு வாரமும் வெளியாகும் அனைத்து படங்களையும் தீர ஆராய்ந்து, அதில் ஒரே ஒரு படத்தை மட்டும் வாரத்தின் சிறந்த படமாக தேர்வு […]

Read More
CLOSE
CLOSE