October 14, 2026
  • October 14, 2026

நடிகை சம்யுக்தாவுக்காக ஷூட்டிங்கை ஒரு மாதம் தள்ளிப்போட்ட பிரபுதேவா

by on November 17, 2021 0

பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள “தேள்” திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரைபிரபலங்கள் மற்றும் பத்திரிக்கை ஊடகங்கள் முன்னிலையில், சென்னையில் நடைபெற்றது. STUDIO GREEN நிறுவனம் சார்பில் K.E. ஞானவேல் ராஜா இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.  தூத்துக்குடி ஹரிகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபுதேவா, ஈஸ்வரி ராவ் இருவரும் அம்மா, மகனாக நடித்துள்ளனர். C.சத்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவ்விழாவில் பிரபுதேவா பேசியதிலிருந்து… இயக்குநர் ஹரிகுமார் மிகச்சிறப்பான பணியினை செய்துள்ளார். இயல்பை விடவும் பலமடங்கு அற்புதமான உழைப்பை தந்துள்ளார். […]

Read More

ஜெய் பீமில் அராஜக போலீஸ் ருத்ர தாண்டவத்தில் நேர்மையான போலீஸ் – கே.ராஜன்

by on November 16, 2021 0

அறிமுக நாயகன் ராம் நடிக்கும் படம் இக்ஷு. டாக்டர் அஸ்வினி நாயுடு தயாரிக்கும் இந்தப் படத்தை வி.வி.ருஷிகா இயக்கியுள்ளார். விகாஸ் படிஷா இசையமைத்துள்ளார். நவீன் டுகிட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. சமீபத்திய மழையின்போது உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இளைஞரை துணிச்சலாக காப்பாற்றிய காவல் ஆய்வாளர் திருமதி ராஜேஸ்வரி அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னோடிகள் முன்னிலையில் டீசரை வெளியிட்டார். விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன், […]

Read More

குமரியில் முதல்வர் – வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேரில் ஆய்வு

by on November 15, 2021 0

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாகவே மழை பெய்துவந்தது. 12-ந் தேதி முதல் மிக கனத்த மழை கொட்டியது. அன்று முதல் தொடர்ந்து பெய்த மழையால் நேற்று முன் தினம் மாவட்டமே வெள்ளக்காடானது.   200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டது. சுமார் 50 ஆயிரம் வீடுகளில் மழை நீர் புகுந்தது.   மேலும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கால்வாய் எது? சாலை எது? என்று தெரியாத அளவுக்கு வெள்ளம் ஓடியது. குழித்துறை, தோவாளை, தேரேகால்புதூர், தக்கலை, […]

Read More

செங்கோட்டை இயக்குனர் சசிகுமார் திடீர் மரணம்

by on November 14, 2021 0

அர்ஜூன் நடித்த ‘செங்கோட்டை’ படத்தை இயக்கிய இயக்குநர் சி.வி.சசிகுமார் இன்று சென்னையில் காலமானார். போரூர், ராமச்சந்திரா மருத்துவமனையில் கேன்சருக்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலையில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமாகிவிட்டார். 1996ம் ஆண்டு வெளியான படம் ‘செங்கோட்டை’.அர்ஜூன் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா,ரம்பா ஆகியோர் நடித்திருந்தனர். அதற்குப்பின் அவருக்குப் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் தனது நட்பு வட்டாரத்தில் நிறைய பேருக்கு கதை, திரைக்கதை எழுதித்தந்தவராக அவரது நண்பர்களால் அறியப்படுகிறார். பின்னர் […]

Read More

நடிகர் சௌந்தரராஜா – தமன்னாவுக்கு பெண் குழந்தை பிறந்தது

by on November 14, 2021 0

தமிழ் சினிமாவில் எதிர் நாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருபவர் சௌந்தரராஜா. இவர் சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில், ஜகமே தந்திரம் போன்ற படங்களில் கவனிக்க வைக்கும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர் சௌந்தரராஜா, தமன்னா என்பவரை 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக கூறும் சௌந்தரராஜா, குழந்தைகள் தினத்தில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது எனக்கு அளவில்லா […]

Read More

கோவையில் பாலியல் சீண்டலால் தற்கொலை செய்த மாணவியின் உடலை வாங்க மறுப்பு

by on November 13, 2021 0

கோவையில் சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் மாணவிக்கு பாலியல் தொல்லை, தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போராடியவர்கள், ”மாணவி புகார் கொடுத்தும் பாலியல் அத்துமீறலுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், […]

Read More

சூர்யாவின் ஒத்துழைப்பு சிறப்பான நடிப்பை தர வைத்தது – ஜெய் பீம் ராவ் ரமேஷ்

by on November 13, 2021 0

நடிகர் சூர்யா தயாரித்து நடிக்க, த.செ. ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் பெரு வெற்றி அடைந்து இருக்க, படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் கவனம் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் நமக்கு அதிகம் பரிச்சயம் இல்லாமல் ஆச்சரியப்படுத்திய ஒரு நடிகர் அட்டர்னி ஜெனரல் ஆக வந்த ராவ் ரமேஷ். அவரது பார்வை, பேச்சு, உடல்மொழி அனைத்துமே அவர் ஒரு பண்பட்ட நடிகர் என்று உணர்த்தியது. அது உண்மைதான். அவர் தெலுங்கில் கிட்டத்தட்ட 120 படங்களுக்கு மேல் அத்தனை முன்னணி ஹீரோக்களுடனும் […]

Read More

டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடிதத்துக்கு நடிகர் சூர்யா பதில்

by on November 11, 2021 0

ஜெய் பீம் படம் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அனுப்பிய கடிதத்துக்கு இன்று பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார் நடிகர் சூர்யா. அது வருமாறு… மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி.   நீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், ‘அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் […]

Read More

லைக்கா சிவகார்த்திகேயன் கை கோர்க்கும் டான் முதல் பார்வை வெளியானது

by on November 10, 2021 0

பிரமாண்டமான திரைப்படங்களை தயாரிக்கும் லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து வழங்கும், சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது ! சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் “டான்” திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே, ரசிகர்களிடம் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அனிருத்தின் இசையில் வெளியான வண்ணமயமான மோஷன் போஸ்டர், அதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி போன்ற சிறந்த நடிகர்கள் படக்குழுவினருடன் இணைய, இப்படம் ரசிகர்களின் ஆர்வத்தை மென்மேலும் கூட்டி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு […]

Read More
CLOSE
CLOSE