July 4, 2026
  • July 4, 2026

கார்டியன் திரைப்பட விமர்சனம்

by on March 10, 2024 0

வில்லன்களால் கொடூரமாகக் கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் ஆத்மா பேயாகி தன் பழியைத் தீர்த்துக் கொள்ளும் கதை ஒன்றும் புதிதில்லை. அதற்கு அந்தப் பேய் உயிருடன் இருக்கும் ஹன்சிகாவைப் பயன்படுத்திக் கொள்வதிலும் எந்த புதிய சிந்தனையும் இல்லை. ஆனால் பேய் என்றாலே கொடூரமாகவும் அவலட்சனமாகவும் இருக்க வேண்டுமா..? ஹன்சிகாவைப் போல் அழகான பேய், உலகில் இருக்காதா..? என்று இயக்குனர்கள் சபரியும் குரு சரவணனும் நினைத்திருப்பது ஒன்று மட்டும்தான் இதில் புதிய ஐட்டம். பிறந்ததிலிருந்து ஹன்சிகா ஒரு அதிர்ஷ்டக் கட்டையாம். […]

Read More

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே சினிமா விமர்சனம்

by on March 8, 2024 0

படத்தைப் பார்த்துவிட்டு முகம் சுளித்து, தலைப்புக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்களை பத்தாம் பசலிகள் லிஸ்டில் சேர்த்துவிடலாம். ஆக்கத்தில் சினிமாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக அமைந்திருக்கிறது இந்தப் படம் என்று கட்டியம் கூறியே ஆரம்பிக்கலாம். நடுத்தர வர்க்க குடும்பங்களில் “அடுத்து என்ன..?” என்று யோசிக்க வேண்டிய அடாலசன்ஸ் பருவத்தைத் தாண்டிய இளைஞர்களைப் பற்றிய கதை இது. காமம் மனத்தில் அடர்த்தியாக நிற்க, வாழ்வில் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று புரிய வழிகாட்டுதல் இல்லாத […]

Read More

ஜெ பேபி திரைப்பட விமர்சனம்

by on March 7, 2024 0

அனைத்து உயிர்களும் போற்றி வணங்கத்தக்க ஒரு ஜீவன் ‘ அம்மா’. அதிலும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையில் பல குழந்தைகளைப் பெற்றெடுத்து கணவனையும் இழந்த கைம்பெண்கள் அந்தக் குழந்தைகளை வளர்க்கப்படும் பாடு கண்ணால் காணாத தெய்வத்திற்கு ஒப்பானது. கண்ணில் கண்ட தெய்வமான அந்தத் தாயின் நிலை கடைசியில் எப்படி ஆகிறது என்பதை உணர்வுகள் கொப்பளிக்கப் படமாக வடித்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி. அந்த தாயின் பாத்திரத்தில் வாழ்ந்தே முடித்திருக்கிறார் ஊர்வசி. கமல், ஊர்வசி போன்றவர்கள் சரியாக நடிக்கவில்லை […]

Read More

அரிமாபட்டி சக்திவேல் திரைப்பட விமர்சனம்

by on March 6, 2024 0

திருச்சிக்கு அருகில் இருக்கும் அரிமா பட்டி என்கிற ஊரில் ஒரு பிளாஷ் பேக்குடன் தொடங்குகிறது படம். சாதி விட்டு சாதி திருமணம் செய்த குற்றத்திற்காக ஒரு காதல் ஜோடியை பஞ்சாயத்தில் வைத்து ஊரை விட்டு ஒதுக்கி வைக்க, அதை எதிர்த்து அதே ஊரில் வாழ முற்படுகிறது ஜோடி. ஊர்ப்பொதுவில் வைத்து அதற்கு சம்மதம் சொல்லிவிட்டு அன்று இரவு அவர்கள் வீட்டுக்குள் போகும் ஒரு கும்பல் அவர்களைக் கொன்று தீர்க்கிறது. அந்த அளவுக்கு சாதி வெறி தலைக்கு ஏறிய […]

Read More

அதிநவீன நோய் கண்டறியும் கருவிகள் மற்றும் புதிய மருந்தியல் சிகிச்சைகளுடன் அப்போலோ அமைத்த சிகிச்சை மையம்

by on March 5, 2024 0

அப்போலோ மருத்துவமனை, கல்லீரல் நோய்கள் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை மையத்தில் கொழுப்பு கல்லீரல் சிகிச்சை மையத்தை அமைத்துள்ளது: அதிநவீன நோய் கண்டறியும் கருவிகள் மற்றும் புதிய மருந்தியல் சிகிச்சைகளுடன் இந்த சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது!  முதல் 75 பதிவுகளுக்கு அறிமுக சலுகையாக இலவச நோயறிதல் சோதனை மற்றும் ஆலோசனை வசதி வழங்கப்படுகிறது சென்னை, 4 மார்ச் 2024: கொழுப்பு கல்லீரல் நோய் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இது ஒரு பெரிய சுகாதார கவலையாக […]

Read More

ஹன்சிகா’ நடிப்பில் மார்ச்-8-ஆம் தேதி மிரட்டலாக வெளியாகும் ‘கார்டியன்’

by on March 5, 2024 0

*’கார்டியன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி!* தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் நடித்துள்ள ‘கார்டியன்’ திரைப்படத்தின் மிரட்டலான டீஸர் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீஸரில் ஹன்சிகா இரட்டை வேடத்தில் வருவது மாதிரியான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரச் செய்யும் பயமுறுத்தக்கூடிய காட்சிகளுடன் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்புடன் கூடிய காட்சிகளும் அமைந்துள்ளன. இத்திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானியுடன் […]

Read More

ஜெ பேபி எனக்குத் தந்த உணர்வுகளை மக்களுக்கும் தரும்..! – பா.ரஞ்சித்

by on March 5, 2024 0

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்க, சுரேஷ் மாரி இயக்கியுள்ள படம் ‘J.பேபி.’ ஊர்வசி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தினேஷ் மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தை ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.   சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெங்கட் பிரபு […]

Read More

ப்ளூ ஸ்டார் ஏர் கண்டிஷனர்கள் – 80 ஆவது ஆண்டில் ஏகப்பட்ட சலுகைகள்

by on March 4, 2024 0

ப்ளூ ஸ்டார், ரூம் ஏர் கண்டிஷனர்களின் 100 க்கும் மேற்பட்ட மலிவு விலை மற்றும் பிரீமியம் மாடல்களின் ஒரு புதிய வரம்பை அறிமுகப்படுத்துகிறது… சென்னை: மார்ச் 4, 2024: ப்ளூ ஸ்டார் லிமிடெட், வரவிருக்கும் கோடை காலத்திற்காக, ஒரு ‘வகையில் சிறந்த மலிவு விலை’ மற்றும் ஒரு ‘ஃபிளாக்ஷிப் பிரீமியம்’ வரம்பு உட்பட, அதன் புதிய அறை ஏர் கண்டிஷனர்களின் விரிவான வரம்பை இன்று வெளியிட்டது. ஒட்டுமொத்தமாக, இந்த நிறுவனம் இன்வெர்ட்டர், நிலையான வேகம் மற்றும் வின்டோ […]

Read More

சினிமா அரசியலை விட்டு போகமாட்டேன் – ‘காடுவெட்டி’ விழாவில் ஆர்.கே.சுரேஷ்

by on March 4, 2024 0

.காடுவெட்டியார், காடுவெட்டி குரு, காடுவெட்டி என்றால் தமிழ் நாட்டு மக்களிடம் அத்தனை பிரபலம். அந்த தலைப்பில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, சோலை ஆறுமுகம் இயக்கி இருக்கும் படம் ‘காடுவெட்டி’. மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு சோலை ஆறுமுகம் ஆகியோர்,இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்திருக்கிறார். வணக்கம் தமிழா சாதிக் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். மா.புகழேந்தி […]

Read More

எல்லோர் வீட்டிலும் ஒரு சிங்கப்பெண் இருப்பாள் – ஷில்பா மஞ்சுநாத்

by on March 3, 2024 0

“சிங்கப் பெண்ணே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! JSB Film Studios சார்பில் தயாரிப்பாளர் JSB சதீஷ் எழுதி இயக்க, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் ஆர்த்தி நடிப்பில், பெண் குழந்தைகள் விளையாட்டை மையப்படுத்தி, உருவாகியுள்ள திரைப்படம் “சிங்கப் பெண்ணே”. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் திரையிடல் நிகழ்வு நேற்று படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் இயக்குநர் JSB சதீஷ் பேசியதாவது “மூன்று வருட போராட்டங்களுக்குப் பிறகு, […]

Read More
CLOSE
CLOSE