January 24, 2025
  • January 24, 2025

ஆதார் திரைப்பட விமர்சனம்

by on September 23, 2022 0

பன்னாட்டு தயாரிப்பான கார் ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியுடன் படம் தொடங்குகிறது.  அதைத்தொடர்ந்து அதன் சுவடுகளே இல்லாமல் கட்டிட தொழிலாளியான கருணாஸ் தன் கைக்குழந்தையுடன் காவல் நிலையம் வந்து குழந்தை பெற்ற தன் மனைவி ரித்திகாவை மருத்துவமனையில் இருந்து காணவில்லை என்று புகார் செய்கிறார். அவர் கிடைத்தாரா என்பதுதான் மீதி கதை. கருணாசுக்கு இந்தப்படம் பல விருதுகளைப் பெற்றுத் தரும். என்ன ஒரு அற்புதமான நடிப்பு..? அந்தப் பாத்திரமாகவே மாறியிருக்கும் அவரைக் கைக்குழந்தையைப் பிடுங்கி விட்டு இன்ஸ்பெக்டர் பாகுபலி […]

Read More

குழலி திரைப்பட விமர்சனம்

by on September 23, 2022 0

இப்படி ஒரு படம் பார்த்து எத்தனை வருஷங்கள் ஆச்சு என்று நினைக்க வைக்கும் படம்.  மண் மணத்துடன் மனிதர்களையும், கிராமிய வாழ்க்கையையும் அங்கே வலிந்து திணிக்கப்பட்ட சாதிய கொடுமைகளை இன்னும் தூக்கிப் பிடிக்கும் அவலத்தையும் உணர்வும், உணர்ச்சியுமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் சேரா. கலையரசன். தென் மாவட்ட கிராமம் ஒன்றில் நடக்கிறது கதை. டைட்டில் போடும்போது அந்த கிராமம் என்ன விதமான சாதிய கட்டுப்பாடுகளுடன் இருக்கிறது என்பதையும், தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படி தங்கள் உரிமையை விட்டுக் கொடுக்காமல் […]

Read More

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ‘காட்ஃபாதர்’ பட சிங்கிள் ட்ராக் வெளியீடு

by on September 21, 2022 0

மெகா ஸ்டார் சிரஞ்சீவியும், பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான் கானும் இணைந்து நடித்திருக்கும் ‘காட்ஃபாதர்’ படத்தில் இடம்பெற்ற ”தார் மார் தக்கரு மார்…’ என தொடங்கும் சிங்கிள் ட்ராக் வெளியானது. தெலுங்கு மற்றும் இந்தியில் இந்த பாடல் வெளியாகி இருக்கிறது. டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான்கான் இருவரும் இடம் பெறும் ‘தார் மார் தக்கரு மார்..’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் வெளியிடப்பட்டிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில் […]

Read More

பார்ட் 2 படங்களை வெளுத்த ராமராஜன் – சாமானியன் விழாவில் ருசிகரம்

by on September 21, 2022 0

வித்தியாசமான கதைக்களத்துடன் நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் தயாராகும் படம் சாமான்யன். கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு மக்கள் நாயகன் நடிகர் ராமராஜன் இந்தப்படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். இந்த படத்தை இயக்குநர் ராகேஷ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கியவர். இந்த படத்தில் கதாநாயகியாக நக்சா சரண் என்பவர் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ராதாரவி, […]

Read More

ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாள் பரிசு – ‘கப்ஜா’ பட டீசர்

by on September 20, 2022 0

நடிகர் ராணா டகுபதி வெளியிட்ட ‘கப்ஜா’ பட டீசர் ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாள் பரிசாக வெளியாகியிருக்கும் ‘கப்ஜா’ பட டீசர கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘கப்ஜா’ படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் டீசரை ‘பாகுபலி’ படப் புகழ் நடிகர் ராணா டகுபதி வெளியிட்டிருக்கிறார். வெளியான குறுகிய கால அவகாசத்தில் பெரும் வரவேற்பைப் […]

Read More

‘டிராமா’ படக்குழுவினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய கிஷோர்

by on September 20, 2022 0

180 நாட்கள் ரிகர்சலை ஏழே நாட்களில் முடித்தார்… அசந்து போன படக்குழு! மலையாள இயக்குனர் அஜு குளுமலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “டிராமா”.  இந்த படத்தில் கிஷோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜெய்பாலா நாயகனாகவும் காவ்யா பெல்லு நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.  இந்த படமானது ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழு படத்தில் நடிக்கும் நடிகர்களை வைத்து சுமார் 180 நாட்கள் ரிகர்சல் நடத்த திட்டமிட்டிருந்தது.  நடிகர் கிஷோர் இந்த ரிகர்சலை வெறும் 7 […]

Read More

அப்பாவுடன் நடித்த சின்னி ஜெயந்த் என் படத்திலும் கல்லூரிக்கு வருகிறார் – அதர்வா

by on September 17, 2022 0

பிரமோத் பிலிம்ஸ் சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி, ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் வழங்கும், சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும் திரைப்படம் “ட்ரிகர்” இப்படம் தூண்டல் எனும் அடிப்படையில் புதுமையான திரைக்கதையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. இப்படம் செப்டம்பர் 23 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. பட வெளியீட்டை ஒட்டி படக்குழு செப்டம்பர் 16 அன்று ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். நிகழ்வில் அருண் பாண்டியன் பேசியதாவது.., நான் நீண்ட வருடங்களுக்குப் பிறகு என் மகளுடன் ஒரு படம் […]

Read More

பணம் முக்கியமில்லை – பஞ்ச் லைனுடன் பனாரஸ் டிரால் பாடல் வெளியானது

by on September 17, 2022 0

ஜெயந்திரா இயக்கத்தில், சயத் கான் மற்றும் சோனால் மாண்டெய்ரோ நடித்துள்ள பான் இந்தியா படமான ‘பனாரஸ்’ வருகிற நவம்பர் மாதம் 4ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்போது ‘பனாரஸ்’ படத்தில் இருந்து ட்ரால் என தலைப்பிடப்பட்டுள்ள புதிய பார்ட்டி பாடல் வெளியாகியுள்ளது. அஜ்னேஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்த பாடலை ஜெஸ்ஸீ கிஃப்ட் பாடியுள்ளார். ஜெஸ்ஸீ கிஃப்ட்டின் கிறங்கடிக்கும் குரல் பார்ட்டி பாடலுக்கு கூடுதல் சிறப்பு […]

Read More

வெந்து தணிந்தது காடு திரைப்பட விமர்சனம்

by on September 17, 2022 0

இலக்கியத்தில் பெயர் வாங்கியவர்கள் சினிமாவுக்குள் வரும்போது அது வெற்றி பெறாது என்றொரு எண்ணம் ஒரு காலத்தில் இருந்தது. அந்த எண்ணத்தை மெதுமெதுவே சுஜாதா மாற்றிக் காட்டினார். அதற்குப் பிறகும் பல எழுத்தாளர்கள் சினிமாவுக்குள் வந்து கொண்டிருந்தாலும் சுஜாதா பெற்ற வெற்றியை இவர்களால் பெற முடியவில்லை என்பது உண்மை. அந்த வகையில் இந்தப் படத்தில் எழுத்தாளர் ஜெயமோகனும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் கைகோர்த்து இருக்கிறார்கள். இரண்டு வெவ்வேறு ஆளுமைகள் ஒன்று சேரும்போது என்ன நடக்குமோ அது நடந்திருக்கிறது. […]

Read More

சினம் திரைப்பட விமர்சனம்

by on September 16, 2022 0

அனுபவ நடிகர் விஜயகுமார் தன்மகன் அருண் விஜய்க்காக தயாரித்திருக்கும் படம் இது. அப்பாவைப் போலவே சினிமா துறையில் நல்ல பெயர் எடுத்த அருண் விஜய் திறமையிலும் அவருக்கு குறைந்தவர் இல்லை என்று இந்த படம் மூலம் நிரூபித்திருக்கிறார். ஏற்கனவே அழகியலோடு அருமையான படங்களைத் தந்த ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கி இருக்கும் படம் இது என்பதால் படம் வெளியாவதற்கு முன்பே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது நிஜம். அந்த எதிர்பார்ப்புக்கு சற்றும் குறை வைக்காமல் முதல் காட்சியில் இருந்து பரபரப்பின் […]

Read More
CLOSE
CLOSE