January 23, 2025
  • January 23, 2025

என்ஜாய் திரைப்பட விமர்சனம்

by on December 22, 2022 0

‘என்ஜாய்’. என்றால் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அத்தனையும் இருக்கிறது படத்தில். ஆனால், படத்தில் சொல்லப்படும் விஷயம் இதுதான். கற்பு என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க, அதை பெண்களுக்கு மட்டுமானதாக – குறிப்பாக வசதி இல்லாத பெண்களுக்கு மட்டுமானதாக இந்த சமுதாயம் நினைக்க அதை ஏன் மீரக் கூடாது என்பதுதான். ஆனால், திருமணம் ஆனபின்பு ஒருவனுக்கு மட்டும் கற்புடன் இருக்கலாம் என்ற செய்தி ஆறுதல் அளிக்கிறது. ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் மதன்குமார், சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் டான்சர் […]

Read More

கொரோனா தொற்றுக்கு அமெரிக்க பலி 11 லட்சம்

by on December 22, 2022 0

உலகில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வெலுவேகமாகப் பரவி வருகிறது. இது அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் தரவுகளின்படி… உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருக்கிறது. அங்கு கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்து விட்டது. நேற்று மதிய நிலவரப்படி அங்கு இந்த தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 10 கோடியே 7 ஆயிரத்து 330 ஆகும். […]

Read More

கனெக்ட் திரைப்பட விமர்சனம்

by on December 21, 2022 0

உலகம் எப்போதும் நிலையாக ஒளியுடன் இருந்தாலோ அல்லது முற்றிலும் இருளாக இருந்தாலோ பேய் பற்றிய பயமே இல்லாமல் இருக்கும். ஒளியும், இருளும் கலந்து நிற்பதுவே பயத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல்தான் ஒலி விஷயத்திலும்..! இந்த உண்மையைச் சரியாக புரிந்து, அதை லாவகத்துடன்  பயன்படுத்தினால் ஒளி, ஒலியை அடிப்படையாகக் கொண்ட சினிமா செல்லுலாய்டில் பேய் பற்றிய பயத்தை ஏற்படுத்த இயலும் எனபதைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார் இயக்குனர் அஷ்வின் சரவணன் இந்தப் படத்தின் மூலம். ஆனால், பேய்ப் படங்கள் பலவற்றையும் […]

Read More

தையல் நாயகி ஆகிறார் த்ரிஷா – ராங்கி பட சுவாரஸ்யங்கள்

by on December 19, 2022 0

த்ரிஷா சமீபத்தில்தான் ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’  தயாரிப்பில் மணிரத்தினம் இயக்கி  வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை பாத்திரத்தில் வந்து கலக்கி இருந்தார்.  இப்போது அதே ‘லைகா’ தயாரிப்பில் அவர் கதை நாயகியாக நடிக்கும் ராங்கி படம் வரும் 30ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கதை எழுதியுள்ள இந்தப் படத்தை ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கி இருக்கிறார். த்ரிஷாவுடன் அனஸ்வரா ராஜன், ஜான்மகேந்திரன் உட்பட கலைஞர்கள் நடித்துள்ள இந்தப்படத்துக்கு சி.சத்யா இசையமைத்திருக்கிறார். கபிலன் […]

Read More

அந்தோணிதாசன் ஹீரோவாகும் ஒரு படத்தை இயக்குவேன் – சீனு ராமசாமி

by on December 17, 2022 0

சென்னையில் நடந்த ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் ஆடியோ கம்பெனி தொடக்கவிழாவில், அந்தோணிதாசனுக்கு உலகெங்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த ரசிகர்களைப்போல நானும் அந்தோணிதாசனின் ரசிகை, என சின்னக்குயில் சித்ரா நெகிழ்ந்து பேசினார். அந்தோணிதாசன் சிறந்த பாடகர் மட்டுமல்ல, பிரமாதமான நடிகன். அந்தோணிதாசன் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை நான் இயக்குவேன் என இயக்குநர் சீனு ராமசாமி பேசினார். பாடகரும் இசையமைப்பாளருமான அந்தோணிதாசன், கவனிக்கப்படாத நாட்டுப்புறப் பாடகர்கள் மற்றும் கலைஞர்களுக்காக, ’ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ்(Folk Marley Records) என்னும் […]

Read More

போஸ்ட் அபோகலிப்டிக் திரில்லரான ‘கலியுகம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

by on December 15, 2022 0

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் நடிகர் கிஷோர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கலியுகம்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரைம் சினிமாஸ் எனும் நிறுவனத்தின் உரிமையாளரான கே. எஸ். ராமகிருஷ்ணா, ஆர். கே. இன்டர்நேஷனல் இன்கார்ப்பரேட் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கும் திரைப்படம் :கலியுகம்’. இதனை இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தில் ‘விக்ரம் வேதா’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘விட்னஸ்’ ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். […]

Read More

மான் வேட்டை வசூல் வேட்டையும் காண வேண்டும் – கே.ராஜன்

by on December 15, 2022 0

அகம் புறம், தீநகர், காசேதான் கடவுளடா படங்கள் புகழ் இயக்குநர் திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில், ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் “மான் வேட்டை”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தினை T Creations சார்பில் இயக்குநர் M.திருமலை இப்படத்தினை தயாரித்துள்ளார். இந்நிலையில் திரை பிரபலங்களோடு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர் முன்னிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.  இந்நிகழ்வில்   தயாரிப்பாளர் K.ராஜன் பேசியதாவது… ” இயக்குநர் திருமலை அனைவருக்கும் […]

Read More

பான் இண்டியா படம் எடுப்பதே ஒரு பைத்தியக்காரத்தனம் – அமீர் அதிரடி

by on December 14, 2022 0

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப்படத்தை வெளியிடுகிறார். கதையின் நாயகனாக அமீர், கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன், இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். […]

Read More

பல சூப்பர் ஸ்டார்களை சிறிய படங்கள்தான் உருவாக்கி உள்ளன – அர்ச்சனா கல்பாத்தி

by on December 11, 2022 0

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள லவ் டுடே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, OTT தளத்திலும் தற்போது வெளியாகி சிறப்பான வரவேற்பு பெற்றுள்ளது. படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பை லவ் டுடே குழு இன்று ஏற்பாடு செய்தது. இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் […]

Read More

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்பட விமர்சனம்

by on December 10, 2022 0

தலைப்பு புரியுதுல்ல..? வைகைப் புயல் வடிவேலு மீண்டும் ஃபார்முக்கு வந்து விட்டார் என்று சொல்கிற தலைப்புதான் இது. அவரே நடித்து புகழ்பெற்ற பாத்திரமான நாய் சேகராக இதிலும் வந்து, லந்து பண்ணியிருக்கிறார். வீட்டில் விலை உயரந்த பொருள் காணாமல் போனால் கூட வருத்தப்பட்டு பின்னர் விட்டு விடுபவர்கள், தாங்கள் வளர்க்கும் நாயைக் காணவில்லை என்றால் சாப்பாடு, தூக்கம் இன்றித் தவிப்பார்கள். இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி நாய் வளர்ப்பவர்கள் வீட்டில் இருந்து நாயைக் கிட்னாப் செய்து கொண்டு போய், […]

Read More
CLOSE
CLOSE