May 15, 2024
  • May 15, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • உண்மையான குழந்தையின் எடையைக் கட்டிக்கொண்டு கர்ப்பிணியாக நடித்த மிர்னா
February 14, 2024

உண்மையான குழந்தையின் எடையைக் கட்டிக்கொண்டு கர்ப்பிணியாக நடித்த மிர்னா

By 0 74 Views

சேபியன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீராம் சிவராமன், விக்ரம் ஸ்ரீதரன் எழுதி தயாரித்திருக்கும் படம் ‘பர்த் மார்க்’ (Birth Mark). இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் விக்ரம் ஶ்ரீதரன்.

‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் ஹீரோவாக நடிக்க, நாயகியாக ‘ஜெயிலர்’ புகழ் மிர்னா ஜோடி சேர, பி.ஆர்.வரலட்சுமி, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இனியவன் பாண்டியன் படத்தொகுப்பு செய்ய, ராமு தங்கராஜ் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். கூடுதல் திரைக்கதை பணியை அனுசுயா வாசுதேவன் கவனித்துள்ளார்.

இந்த மாதம் (பிப்ரவரி) 23 -ஆம் தேதி  வெளியாக உள்ள இப்படம் பற்றி இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் மற்றும் தயாரிப்பாளரும், கதையாசிரியருமான ஸ்ரீராம் சிவராமன் மீடியாக்களிடம் பேசினார்கள்.

ஶ்ரீராம் சிவராமன் பேசும்போது…

“கொரோனா நேரத்தில் இது பற்றிப் பேசினோம். இதுவரை அறியாத களம் பற்றிப் பேசுகையில், நேச்சுரல் பர்த் பற்றி விக்ரம் ஒரு லைன் கூற அது பற்றி நாங்கள் நிறைய படித்தோம்.

இந்தியாவின் சில மாநிலங்களில் நேச்சுரல் பர்த் முறை இருந்தாலும், சில மாநிலங்களில் மட்டும் அந்த முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இதில் நாங்கள் இயற்கை பிரசவ முறை பற்றிப் பேசுவதால் சிசேரியன் முறையிலான குழந்தை பிறப்புக்கு எதிராகவோ அல்லது இயற்கை குழந்தை பிறப்புக்கு ஆதரவாகவோ நாங்கள் பேசவில்லை. அதை ஒரு களமாக எடுத்துக்கொண்டு ஒரு தம்பதியின் மனப்போரட்டங்களை ஒரு த்ரில்லராகக் கூறியிருக்கிரோம்.

இது போன்ற நடைமுறையில் பிரசவமாகும் பெண்ணுடன் அவள் கணவரும் இருக்க வேண்டும். அவர்களைத் தனிமைப்படுத்தும்போது, அவர்களுக்கு  ஏற்படும் பதற்றம், நம்பிக்கையின்மை போன்றவற்றை திரைக்கதை ஆக்கி இருக்கிறோம். அதை சுவாரஸ்யமாக சொல்லி இருப்பதால் ரசிகர்கள் படத்தின் முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். காட்சிக்கு காட்சி படத்தில் எதாவது ஒன்று நடந்து கொண்டு தான் இருக்கும்…!” என்றார்.

இயக்குனர் விக்ரம் ஶ்ரீதரன் பேசுகையில்,

“ஷபீரும், மிர்னாவும் பாத்திரங்களுக்கு மிகப் பொருத்தமாக இருந்தார்கள். அவர்கள் எப்போது இந்தக் கதையைக் கேட்டார்களோ அதில் இருந்து அர்ப்பணிப்புடன் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டார்கள்..!” என்றார்.

ஒரு குழந்தையின் நிஜ எடையில் புராஸ்தடிக் வயிறு ஒன்றை செய்து வைத்திருந்தோம். அத்துடன் அதே அளவில் எடை குறைவான டம்மியையும் செய்து வைத்திருந்தோம். கர்ப்பிணியின் கஷ்டம் தெரிய வேண்டும் என்பதற்காக மிர்னா நிஜ எடை கொண்ட வயிற்றின் புராஸ்தடிக் வயிற்றைக் கட்டிக் கொண்டு நடித்தார்.

அந்த வயிற்றுடன் ஷூட்டிங் இடைவேளையில் கூட, தனியாக அமர்ந்து கொண்டு வயிற்றில் குழந்தை இருப்பதாக நினைத்துக்கொண்டு குழந்தையுடன் பேசிக்கொண்டு இருந்தார்.

ஷபீரும் தனது பாத்திரத்தின் தன்மைக்கு ஏற்றவாறு அந்த உணர்வுடனேயே தனிமையில் இருப்பார். இவர்கள் அர்ப்பணிப்புடன் தங்களை மனதளவில் தயார்ப்படுத்திக் கொண்டு நடித்ததால், படத்தின் அனைத்து காட்சிகளும் மிக இயல்பாக வந்திருப்பதை நீங்கள் திரையில் பார்க்க முடியும்.

கதைக்கான லொக்கேஷனை ஏழு மாதங்களாக தேடிய பிறகு மூணாருக்குக் கீழே உள்ள மரையூர் என்ற கிராமத்தைப்பார்த்து அங்கே படப்பிடிப்பு நடத்தினோம். லொக்கேஷன் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிப்பதால் அங்கு எங்களுக்கு ஏற்ற வகையில் நான்கு விதமான செட் அமைத்து அதில் படப்பிடிப்பு நடத்தினோம்.” என்றார்.

“கடைசியில் சுகப் பிரசவம்தானே..?” என்றால், “23 வரை பொறுத்திருங்கள்..!” என்றார் விக்ரம்.