October 15, 2025
  • October 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஆளப் போறான் தமிழன் போல் பிகில் சிங்கப் பெண்ணே லீக்கானது
July 16, 2019

ஆளப் போறான் தமிழன் போல் பிகில் சிங்கப் பெண்ணே லீக்கானது

By 0 1319 Views

அட்லீ – விஜய் கூட்டணியில் ‘தெறி’, ‘மெர்சல்’ வெற்றிப் படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக உருவாகி வரும் படம் ‘பிகில்’. கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில் விஜய், ‘மைக்கேல்’ மற்றும் ‘பிகில்’ என்று அப்பா மகனாக நடித்துள்ளார்.

விஜய்யுடன் இணைந்து நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், விவேக், ஆனந்தராஜ், இந்துஜா, வர்ஷா, யோகி பாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். . ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

முதல் முதலாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விஜய் இப்படத்தில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடுகிறார் என்று அறிவிப்பு சில நாள்களுக்கு முன் வெளியானது.

இந்நிலையில் இன்று ஏஆர் ரஹ்மான் பாடி விவேக் எழுதிய ‘சிங்கப்பெண்ணே’ எனத் தொடங்கும் பாடல் வலைதளங்களில் லீக்கானது. அந்தப்பாடலும், பாடலின் வரிகளும் வலைதளம் எங்கும் காணக்கிடைக்கின்றன. அது ஒரிஜினல் பாடலா என்பதை படக்குழுவினர்தான் அறிவிக்க வேண்டும்.

இது தொடர்பாக விஜய் ரசிகர்கள் ஒருபக்கம் அதிர்ச்சி அடைந்தாலும் மறுபக்கம் பாடலைப் புகழ்ந்து வருகிறார்கள். படக்குழு எப்படி இவ்வளவு கவனக்குறைவாக இருந்தார்கள் என்று வருத்தம் கொண்டாலும் தொழில்நுட்பத்தைத் தவிர்க்க இயலாது என்று புரிந்து கொண்டு பாடலைப் பாராட்டி வருகிறார்கள்.

இதே அட்லீயும், விஜய்யும் இணைந்த ‘மெர்சல்’ படத்தில் ‘ஆளப் போறான் தமிழன்’ இப்படித்தான் லீக்காகி பெரு வெற்றி பெற்றது. அதைப்போல் ‘சிங்கப் பெண்ணே’ பாடலும் பெரிய வெற்றி பெறுமென்று கொண்டாடி வருகிறார்கள்.

அதற்காக திட்டமிட்டு படக்குழுவினரே பாடலை லீக் செய்தார்களா என்பதும் ஒரு கேள்வியாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

வலதளத்தில் சுற்றி வரும் பாடல் வரிகளும், பாடலும் கீழே…

‘சிங்கப் பெண்ணே
சிங்கப் பெண்ணே
ஆணினமே உன்னை வணங்குமே…

நன்றி கடன் தீர்த்ததற்கு கருவிலே உன்னை எந்துமே!

ஒருமுறை
தலைகுனி…
நீ வென்ற சிங்க முகத்தைப் பார்ப்பதற்கு மட்டுமே

ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு..!

உன்னைப் பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒருநாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்..!