150 கோடிக்குத் தயாராகி 200 கோடி பிஸினஸ் ஆகி, தமிழ் சினிமாவின் பெஞ்ச் மார்க் என்றெல்லாம் புகழப்பட்ட ‘பிகில்’ படம் எதிர்மறையான விமர்சனங்களால் பின்னுக்குப் போனது.
படம் வெளியாகி மூன்றாவது நாள் முடிவில்தான் (மூன்று நாள்களும் விடுமுறை என்றறிக…) 100 கோடி கிளப்பில் இணைந்தது என்றார்கள். அதற்குப் பிறகு வார நாள்கள் என்பதால் கண்டிப்பாக வசூல் அதில் மூன்றில் ஒரு பகுதிதான் என்றிருக்கும் என்ற நிலையில் எப்படி முதலை வசூலித்து லாபம் ஈட்டும் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்க… நேற்று சென்னையில் இரண்டு ‘பிகில்’ காட்சிகள் போதிய ஆடியன்ஸ் இல்லாமல் நிறுத்தப்பட்ட செய்தி வந்திருக்கிறது.
சென்னை அண்ணாசாலையில் இருக்கும் தேவி திரையரங்க வளாகத்தில் ‘தேவி’ மற்றும் ‘தேவி பாரடைஸ்’ தியேட்டர்களில் ‘பிகில்’ ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நேற்று முதல் மற்றும் மேட்டினி காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
சமூக வலைதளங்களில் இந்த தகவல் பரவ, அது சரியானதுதானா என்றறிய ஒருவர் தியேட்டர் மேலாளரிடம் பேசி உறுதி செய்த ஆடியோ கீழே…