October 29, 2025
  • October 29, 2025
Breaking News
October 4, 2020

உடலை குறைக்க டயட் இருந்து உயிரை விட்ட நடிகை

By 0 692 Views

இறைவன் கொடுத்த உடலை கூட்டுகிறேன் அல்லது குறைக்கிறேன் பேர்வழி என்று ஏகப்பட்ட டயட்களை இப்போது மக்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அதிலும் நடிகர் நடிகையர் மேற்கொள்ளும் டயட்கள் அலாதியானவை.

அதில் ஒன்றுதான் Keto டயட். தன் உடல் எடை கூடி விட்டதால் அதனை குறைப்பதற்காக இந்த கீட்டோ டயட்டை மேற்கொண்டார் பெங்களூரை சேர்ந்த நடிகை மிஷ்டி முகர்ஜி.

பெங்களூரில் பிறந்து வளர்ந்த மிஷ்டி , தென்னிந்திய படங்களில் நடிக்க ஆரம்பித்து நடிகையானவர். பின்னால் வங்காள மற்றும் இந்தி படங்களில் நடித்து அடையாளம் தெரிந்தார்.

27 வயதான மிஷ்டி க்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தன் பெற்றோர் மற்றும் சகோதரருடன் பெங்களூருவில் வாழ்ந்து வந்த அவர் உடல் எடை கூடி விட்டது என்பதற்காக அதை குறைக்க கீட்டோ டயட்டை மேற்கொண்டார்.

அதன் விளைவாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மிகுந்த உடல் வலியுடன் காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மரணம் அடைந்தார்.

முறையான உடற் பயிற்சிகளின் மூலம் அல்லாமல் வெறும் வயிற்றை வாயைக் கட்டிப் போட்டு உடலை குறைத்து விட முடியும் என்று நினைக்கும் அப்பாவிகளுக்கு மிஷ்டியின் மரணம் ஒரு அபாய எச்சரிக்கை.