November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • குறும்பட போட்டியில் வென்ற ஜிகே இயக்கும் அசரீரி படத்தில் ஜீவன்
June 4, 2019

குறும்பட போட்டியில் வென்ற ஜிகே இயக்கும் அசரீரி படத்தில் ஜீவன்

By 0 797 Views

அறிமுக இயக்குனர் ஜி.கே இயக்க, பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிக்கும் ‘அசரீரி’ படத்தில் நடிகர் ஜீவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இது குறித்து படத்தின் இயக்குனர் ஜி.கே. கூறும்போது, “அசரீரி என்பது ஒரு நாவல் வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அறிவியல் புனைவு திரில்லர் படம். நமது கலாச்சாரத்துடன் மரபு ரீதியாக தொடர்பை கொண்ட புராண கதைகளின் குறிப்புகளை இது கொண்டிருக்கும். அது எவ்வாறு இன்றைய தொழில்நுட்ப உலகத்துடன் தொடர்புபட்டது என்பதையும் சொல்லும்.

Director GK

Director GK

எல்லாவற்றிற்கும் மேலாக, ‘அறிவியல்’ எவ்வாறு ஒரு குடும்பத்திற்குள் ஒரு உணர்ச்சி போராட்டத்தை உருவாக்குகிறது என்பதை மையமாகக் கொண்டது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற பார்வையாளர்களை மனதில் வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இதை ரசிப்பார்கள், குறிப்பாக தம்பதிகள் இந்த படத்துடன் தங்களை இணைத்துக் கொள்ள முடியும்” என்றார்.

நாயகனாகும் நடிகர் ஜீவன் பற்றி அவர் கூறும்போது, “ஜீவன் கதைகளை மிகவும் தேர்ந்தெடுத்து நடிப்பவர். உண்மையில், அவர் இந்த படத்தை ஒப்புக் கொள்வாரா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. அவர் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட ஒருவராக இருந்ததால், இந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. உடனடியாக ஒப்புக் கொண்டார். அவர் இதுவரை நடித்த படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்…” என்றார்.

இயக்குனர் ஜி.கே. ஏற்கனவே ‘ராடான் குறும்பட போட்டி’யில் இதே பெயரில் ஒரு அறிவியல் புனைவு திரைப்படத்திற்காக வென்று, புகழ்பெற்றவர். ஆனால், “படத்துக்கு நாங்கள் இந்த தலைப்பை மட்டுமே பயன்படுத்தியுள்ளோம், கதை முற்றிலும் வேறு…” என்கிறார்.

நிரவ் ஷா மற்றும் சரவணன் ஆகியோரின் முன்னாள் உதவியாளர் ஐ மருதநாயகம் ஒளிப்பதிவு செய்கிறார். இசைக்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. படத்தின் தலைப்பு அசரீரி என்பது ஒலியுடன் தொடர்புடையது என்பதால் படத்தில் ஒலி தொழில்நுட்பத்தில் மிகச்சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குமாம்.