Arya amazing look for Pa. Ranjith movie
பா.இரஞ்சித் அடுத்து இயக்கும் படத்தில் ஆர்யா நடிக்கிறார் என்பது தெரிந்த விஷயம். அந்தப்படம் வட சென்னையைக் களமாகக் கொண்ட பாக்ஸிங் வீரனின் கதை என்று இதுவரை தெரிந்திருக்கிறது.
படம் பற்ரிய செய்திகளை இன்று மாலை வெளியிடவிருக்கிறார் பா.இரஞ்சித்.
இந்நிலையில் இந்தப் படத்துக்காக ஆர்யா தன்னை முழுவதுமாக இதுநாள் வரை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார். ‘என்ன பெரிய விஷயம். ஜிம்முக்குப் போய் கும்முன்னு வந்தால் ஆச்சு…’ என்று எளிதாக நினைப்பவர்களுக்காக இந்த புகைப்படம்.
உடலை முறுக்கேற்றுவதில் பல வகைகள் உண்டு. அதில் சிக்ஸ் பேக் வைப்பதுதான் கடினமான முறை. ஆனால், ஆர்யா அதையும் இந்த முயற்சியில் தாண்டி விட்டார். பாறைகள் போல் இறுகிய தசை, வயிற்றில் மட்டுமல்லாமல், உடல் எங்கும்… குறிப்பாக முதுகில் கூட 30 பேக்ஸ் இருக்கும் போலிருக்கிறது எண்ணிப் பார்த்தால்… இத்தனை கடினமான பயிற்சிகளை இதுவரை எந்த தமிழ் நடிகரும் மேற்கொண்டதில்லை எனலாம்.
Arya New Look for Pa.Ranjith Movie
இதுவரை ஆர்யாவின் அர்ப்பணிப்பில் பாலாவின் ‘நான் கடவுள்’ படமே பிரதானமாக இருந்தது. இப்போது அதை பா.இரஞ்சித் படத்துக்காக முறியடித்து விடுவார் ஆர்யா என்று தோன்றுகிறது.
வெல்டன்.. ஆர்யா..!