October 30, 2025
  • October 30, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பா.இரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா
September 9, 2019

பா.இரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா

By 0 724 Views

ஆர்யாவுக்கு ‘மகாமுனி’ நல்லதொரு கம்பேக் தந்திருக்கும் நிலையில் அவர் அடுத்து ‘டிக் டிக் டிக்’ சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ‘டெடி’ படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்து அவர் நடிக்கவிருப்பது பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் என்று ஒரு தகவல் கசிந்திருக்கிறது. அதில் அவர் குத்துச்சண்டை வீரராக நடிக்க இருக்கிறாராம்.

பா.இரஞ்சித்தின் பேவரிட் இடமான வட சென்னையில் வைத்தே இந்தப்படம் ஷூட் செய்யப்படவிருக்கிறதாம். ‘குரங்கு பொம்மை’ படத்தைத் தயாரித்த ஸ்ரேயா ஸ்ரீ மூவீஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கவிருக்கிறார்களாம்.

ஏற்கனவே வட சென்னை குத்துச்சண்டையை வைத்து சில படங்கள் வந்துவிட்டிருந்தாலும் பா.இரஞ்சித்தின் பார்வையும், படமாக்கலும் வேறு அனுபவத்தைத் தரும் என்று எதிர்பார்க்கலாம்..!