October 27, 2025
  • October 27, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • 2 வது விவாகரத்து பெற்ற நடிகை சொன்ன கணவர்களின் கொடுமை
February 7, 2020

2 வது விவாகரத்து பெற்ற நடிகை சொன்ன கணவர்களின் கொடுமை

By 0 732 Views
வெங்கட் பிரபுவின்  உன்னை சரணடைந்தேன் படத்தில் அறிமுகமாகி கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு, ஜெர்ரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன்.
 
பின்னர் மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக தன்மந்த்ரா படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தவர், பிரபல ஒளிப்பதிவாளர் மகனை மீரா வாசுதேவன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
 
பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றார். அதன் பின்னர் மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். அந்த திருமணமும் நீடிக்காமல் அவரையும் விவாகரத்து செய்தார்.
 
இவர்களுக்கு அரிஹரா என்ற மகன் உள்ளார். திருமண முறிவுகள் குறித்து மீரா வாசுதேவன் கூறியதாவது…
 
திருமணம் முறிந்து விவாகரத்துக்கு சென்றால் இந்த சமூகம் பெண்கள் மீதுதான் குறை சொல்கிறது. ஆனால் அந்த பெண்கள் சந்தித்த தொல்லைகளை கண்டு கொள்வது இல்லை.
 
நான் முதல் திருமணம் செய்து கணவரிடம் அனுபவித்த கொடுமைகள் அதிகம். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்ரவதைகளை அனுபவித்தேன். அதை வார்த்தையால் சொல்ல முடியாது.
 
அப்போது எனது உயிருக்கும் மிரட்டல் இருந்தது. இதனால் போலீஸ் பாதுகாப்பு கேட்டேன். 2012-ல் மறுமணம் செய்தேன். அதுவும் மகிழ்ச்சியாக இல்லை. 2-வது கணவரிடமும் மன ரீதியாக சேர்ந்து இருக்க முடியவில்லை. இதனால் அதுவும் விவாகரத்தில் முடிந்தது.”