December 12, 2024
  • December 12, 2024
Breaking News
October 18, 2023

உலக விபத்து காய சிகிச்சை தினம் – அப்போலோ அளிக்கும் விழிப்புணர்வு

By 0 240 Views

அப்போலோ மருத்துவமனை உலக விபத்துக் காய அவசர சிகிச்சை தினத்தையொட்டி ரத்த இழப்பை நிறுத்துவது குறித்து பரவலாக விழிப்புணர்வை ஏற்படுத்த அழைக்கிறது!

  • இந்தியாவில் சாலை விபத்துகளில் தினமும் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்
  • வயது முதிர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்
  • ரத்த இழப்பை நிறுத்தும் மருத்துவ தொழில்நுட்பங்கள் நேரத்தைச் சேமித்து உயிர் காக்கும் அம்சமாகத் திகழ்வதாக மருத்துவகளால் போற்றப்படுகிறது

சென்னை, 17 அக்டோபர் 2023: பல்வேறு விபத்துகளால் ஏற்படும் காயங்களின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முதலுதவி நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ரத்தக்கசிவு மற்றும் ரத்த இழப்பை நிறுத்தும் உத்திகள் குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை அழைப்பு விடுத்துள்ளது. இன்று (அக்டோபர் -17) உலக விபத்துக் காய அவசர சிகிச்சை தினத்தை (World Trauma Day) முன்னிட்டு அப்போலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சை சேவைகள் பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவினர், உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட உயிர் காக்கும் நடைமுறைகள் குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த அழைப்பு விடுத்துள்ளனர்.

ரத்த இழப்பை நிறுத்தும் நுட்பங்கள் என்ற தகவலைப் பரப்ப அப்போலோ மருத்துவர்கள் குழு ஒரு நேரடி செயல் விளக்கத்தையும் நிகழ்த்தியது. மருத்துவ அவசரநிலைக்கு ஏற்ப, பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு நெறிமுறைகளின் தொகுப்பாக இந்த செயல் விளக்கம் அமைந்திருந்தது. பயிற்சி பெற்ற வல்லுநர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பு, ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் உரிய நடைமுறைகள், நேரத்தை மிச்சப்படுத்த உதவும் என்று குழு எடுத்துரைத்தது.

இந்த உரிய இடைக்கால செயல்பாடு, விபத்துகளின்போது முக்கியமான முதலாவது மணிநேரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் இதன் மூலம் சுற்றி இருப்பவர்கள் ஒரு உயிரைக் காக்க முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வயது முதிர்ந்தவர்கள் விபத்துகளால் அதிகம் பாதிக்கப்படுவதை மருத்துவர்கள் சுட்டிக்காட்டினர். வயதானவர்கள் விபத்துத் தொடர்பான காயங்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் எடுத்துக்காட்டினர். தரையில் விழுதல், தவறி விழுந்து காயம் ஏற்படுதல் மற்றும் பிற பிரச்சினைகள் வயது முதிர்ந்தவர்களுக்கு அதிகம் ஏற்படுவதாகவும் அப்போது அவர்களுக்கு ரத்த இழப்பு அதிகம் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வயதானவர்கள் பலர் பல்வேறு நோய்களுக்காக ரத்தத்தை மெலிதாக்கும் (ரத்தத்தை இளக்கும்) மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். இதுவும் அவர்கள் அதிகம் பாதிக்கப்படும் இந்த நிலைக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் சுனிதா ரெட்டி (Suneetha Reddy, Managing Director, Apollo Hospitals Group) இது குறித்துக் கூறுகையில், “தீவிர சிகிச்சை மற்றும் அவசர சேவைகள் பிரிவில் அப்போலோ மருத்துவமனை முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ளது. எங்களிடம் திறமையான மருத்துவர்கள், திறமையாக முதல் உதவி அளிப்பவர்கள் மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய ஊழியர்கள் உள்ளனர்,

அவர்கள் பல்வேறு பகுதிகளில் சிக்கலான விபத்து சிகிச்சைகளை சமாளிக்கத் தயாராக உள்ளனர். நாங்கள் எங்கள் சேவைகளை விரிவுபடுத்தியுள்ளோம். பல வகையான விபத்துக் காயங்கள் மற்றும் ஒரு நபருக்கு ஒரே நேரத்தில் ஏற்படும் பல விதமான விபத்துக் காய சூழல்கள் போன்றவற்றை சமாளிக்க அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் உள்கட்டமைப்பு அம்சங்களில் முதலீடு செய்துள்ளோம்.

1066 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் கிடைக்கக் கூடிய எங்கள் அவசர கால மருத்துவ வாகன (ஆம்புலன்ஸ்) சேவைகள் அதிநவீன அம்சங்கள் கொண்டதாகும். இது எங்களது அவசரகால சிகிச்சை முன்முயற்சிகளின் முக்கிய பகுதியாகும். ஒரு சுகாதார சேவை வழங்கும் நிறுவனமாக நாங்கள் தொடர்ந்து இத்துறையின் முன்னேற்றங்களுக்கு ஏற்ப உரிய வேகத்துடன் எங்கள் ஊழியர்களை மேம்படுத்தி வருகிறோம். அதே வேளையில், ரத்தக்கசிவு மற்றும் ரத்த இழப்பை நிறுத்தும் நுட்பங்கள் குறித்து அதிகம் தெரிந்து கொண்டு விபத்துக் காயங்களின்போது விரைந்து உரிய முறையில் முதலுதவி செயல்பாடுகளை மேற்கொள்ளக் கூடிய சமூகத்தை உருவாக்க உதவுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.” என்றார்.

அப்போலோ மருத்துவமனையின் பன்னோக்கு தீவிர சிகிச்சைப் பிரிவின் மூத்த மருத்துவர் டாக்டர் செந்தில்குமார் (Dr Senthil Kumar, Senior Consultant, Multi-Disciplinary Critical Care Unit, Apollo Hospitals) கூறுகையில், “அப்போலோ மருத்துவமனையைப் பொறுத்தவரை நாங்கள் உலக விபத்துக் காய தினத்தை, அனைத்து தரப்பினருக்கும் விபத்துக் காய சிகிச்சை முதலுதவி செயல்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகப் பார்க்கிறோம்.

ரத்தக் கசிவு அல்லது ரத்த இழப்பை நிறுத்தும் தொழில்நுட்பம் (ஸ்டாப் தி ப்ளீட் டெக்னிக்ஸ்) என்பது பயிற்சி பெற்ற மருத்துவ ஊழியர்களுக்கு மட்டுமானது அல்ல. விபத்து நடந்த இடத்திற்கு அருகிலும் அதற்கு அப்பாலும் உள்ள சாதாரண மக்களுக்குமானதாகும். பல்வேறு விபத்து நிகழ்வுகளின்போது செயல்படவேண்டிய உலகளாவிய பொது தர நிலை செயல்பாடு இதுவாகும். சாலை விபத்துகளில் காயம் அடையும் கணிசமானவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். வயதானவர்களுக்கு காயங்கள் ஏற்படுவது அதிகரிப்பதையும் நாங்கள் காண்கிறோம்.

வயது முதிர்ந்தவர்கள் இதில் ஒரு வகையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் அவர்கள் குணம் அடைவதற்கான பயணத்தில் எங்களது நீடித்த ஆதரவும் தேவைப்படுகிறது. எனவே இந்த அம்சங்களை நாம் கவனத்தில் கொண்டு ஒரு சமூகமாக திறம்பட செயல்பட வேண்டிய அவசரத் தேவைத் உள்ளது. ரத்தக் கசிவு அல்லது ரத்த இழப்பை நிறுத்துவோம் என்பது, செயல்பாட்டுக்கான எங்களது சிறப்பு அழைப்பு ஆகும். உயிர்களைக் காப்பாற்றுவதே எங்கள் நோக்கம். இதற்கு விழிப்புணர்வு முக்கியம்.” என்றார்.

உலகின் மொத்த சாலை விபத்து இறப்புகளில் 90 சதவீத இறப்புகள், இந்தியா போன்ற நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில்தான் நிகழ்கின்றன. 2021-ம் ஆண்டில் உலக வங்கி வெளியிட்ட ஒரு அறிக்கையில், உலகளாவிய சாலை விபத்து இறப்புகளில் 11 சதவீதம் இந்தியாவில் நிகழ்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 53 சாலை விபத்துக்கள் நிகழ்கின்றன. எய்ம்ஸ் விபத்துக் காய அவசர சிகிச்சை மையம் (AIIMS Trauma Centre) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, விபத்துகளால் பாதிக்கப்படுவோரில் 50 சதவீதம் பேர் தற்காலிக அல்லது நிரந்தர இயலாமை அல்லது ஊனத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

விபத்துகளால் பாதிக்கப்படுவோரில் இறப்பு விகிதங்கள் 2 முதல் 3 சதவீதம் ஆகப் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மொத்தம் 9,875 பேர் சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அப்போலோ மருத்துவமனை பற்றி:

1983 ஆம் ஆண்டில், டாக்டர் பிரதாப் சி ரெட்டி இந்தியாவின் முதல் பெரு நிறுவன (கார்ப்பரேட்) மருத்துவமனையான அப்போலோ மருத்துவமனையை சென்னையில் தொடங்கியதன் மூலம் ஒரு முன்னோடி முயற்சியை மேற்கொண்டார். இப்போது, ஆசியாவின் முதன்மையான நம்பகமான ஒருங்கிணைந்த சுகாதாரக் குழுவாக அது உள்ளது.

72 மருத்துவமனைகளில் 12,000 க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. 5000 மருந்தகங்கள், 400-க்கும் மேற்பட்ட ஆரம்ப பராமரிப்பு கிளினிக்குகள், 1228 நோய் கண்டறிதல் மையங்கள், 700-க்கும் மேற்பட்ட தொலை மருத்து மையங்கள், 15 க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்வி மையங்கள் மற்றும் உலகளாவிய மருத்துவப் பரிசோதனைகளை மையமாகக் கொண்ட ஒரு ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகிய பலவற்றுடன் அப்போலோ குழுமம் செயல்பட்டு வருகிறது. அண்மையில் தென்கிழக்கு ஆசியாவின் முதல் புரோட்டான் தெரபி மையம் சென்னையில் தொடங்கப்பட்டது.

ஒவ்வொரு நான்கு நாட்களுக்கும், அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் 10 லட்சம் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் மருத்துவ சேவைகளை வழங்குகிறது. சர்வதேசத் தரத்திலான சுகாதாரம், ஒவ்வொரு தனிநபருக்கும் கிடைக்கூடியதாக மாற்றுவதே அப்போலோவின் பணியாகும். அப்போலோவின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு நினைவு தபால்தலையை வெளியிட்டுள்ளது. இவ்வாறு ஒரு சுகாதார நிறுவனத்திற்கு தபால் தலை வெளியிடப்பட்டது இதுவே முதல் முறையாகும். அப்போலோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டிக்கு 2010-ம் ஆண்டில் மதிப்புமிக்க பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

40 ஆண்டுகளாக, அப்போலோ மருத்துவமனைகள் குழுமம், மருத்துவ கண்டுபிடிப்புகள், உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சேவைகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவற்றில் தொடர்ந்து சிறந்து விளங்கி, இத்துறையில் தமது முன்னணி நிலையைப் பராமரித்து வருகிறது. மேம்பட்ட மருத்துவ சேவைகளுக்காக நாட்டின் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக அப்போலோ மருத்துவமனைகள் தொடர்ந்து தரவரிசைப்படுத்தப்பட்டு வருகின்றன.

For more information please contact:

APOLLO HOSPITALS I Suganthy S 9841714433

ADFACTORS PR| Timothy J 9962629240 I Anjana Raghu Ram 9677220106