எஸ்பி ஹோசிமின் இயக்கியிருக்கும் இந்தோ-ஜப்பானிய படமான ‘சுமோ’, சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படமாகும்.
ஜப்பானில் பாடல் காட்சிகளையும், படபிடிப்பையும் நடத்துவது மிகவும் கடினமான ஒன்று. இருப்பினும் 35 நாட்கள் படப்பிடிப்பு அங்கே வெற்றிகரமாக படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார் ஹோசிமின். அதற்கு உந்து சக்தியாக பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக படத்தைத் தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.
‘வணக்கம் சென்னை’ படத்தைத் தொடர்ந்து, மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் இணைந்து நடித்துள்ள ‘சுமோ’வில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விடிவி கணேஷ் நடித்திருக்கிறார். வழக்கம்போல் யோகி பாபு இந்தப்படத்திலும் கலக்கியிருக்கிறாராம்.
இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ‘சுமோ’ திரைக்கு வர இருப்பதாக சுதந்திர தினமான இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.