November 14, 2024
  • November 14, 2024
Breaking News
August 2, 2018

ஹீரோவுக்கே கதை சொல்லாத அறிமுக இயக்குநர்

By 0 1004 Views

இயக்குநர் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’யும் , ‘பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘அண்ணனுக்கு ஜே’. படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குனரான ராஜ்குமார் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

இப்படத்தின் நாயகனாக தினேஷும், அவரது ஜோடியாக மஹிமா நம்பியாரும் நடித்துள்ளனர். மேலும் ராதாரவி, மயில் சாமி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘அரோல் கரோலி’ இசை அமைத்துள்ள ‘அண்ணனுக்கு ஜே’ படத்தில் விஷ்ணு ரங்கசாமி அறிமுக ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலைஞர்கள் பேசியதிலிருந்து…

நாயகன் தினேஷ் –

“இந்தப் படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக இயக்குனர் ராஜ்குமார் அவர்களுக்கும் வெற்றிமாறன் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மஹிமா அருமையாக நடித்துள்ளார்.
இசையமைப்பாளர் அரோல் 7 பாடல்களுக்கு நன்றாக இசையமைத்துள்ளார் .ராதாரவி அவர்களுடன் நடித்ததும் பெருமையாக உள்ளது. இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்..!”

Annanukku Jai

Annanukku Jai

இயக்குநர் ராஜ்குமார் –

“இப்படத்திற்கு பக்கபலமாக கூட இருந்துள்ள வெற்றிமாறன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஹீரோ தினேஷுக்கு முழுக்கதையை சொல்லாமலேயே நடிக்க வைத்தேன். நடிகை மஹிமா மேக்கப் கூட போடாமல் நடித்திருக்கிறார். மயில்சாமியும் வையாபுரியும் நகைச்சுவை நடிகர்களாக பல படங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால், இந்தப்படத்தில் சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்..!”

இசையமைப்பாளர் அரோல் கரோலி –

“எனது மற்ற படங்களை விட இந்தப் படத்தில் ஒரு வகையில் வித்தியாசமான முறையில் இசையமைத்துள்ளேன். ஏழு பாடல்களும் ஏழு விதம்..!”

நாயகி மஹிமா நம்பியார் –

“வெற்றிமாறன் போன்ற பெரிய இயக்குனரின் தயாரிப்பு நிறுவனத்தில் படம் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப்படத்தில் ‘தர லோக்கல்’ கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளேன். மேலும், இந்தப் படத்தில் எனது சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளேன்..!”

தயாரிப்பாளர் வெற்றிமாறன் –

“தினேஷ் தனது முழு சக்தி வாய்ந்த நடிப்பைத் தந்துள்ளார். படத்தில் நடித்த அனைவரும் அருமையாக நடித்துள்ளனர். இயக்குனர் ராஜ்குமார் நல்ல படத்தைத் தந்துள்ளார். படம் வெற்றி அடைய வாழ்த்துகள்..!”