January 24, 2025
  • January 24, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தாழிடப்பட்ட வீட்டுக்குள் அஜித் பட இயக்குநர் மர்ம மரணம்
August 2, 2018

தாழிடப்பட்ட வீட்டுக்குள் அஜித் பட இயக்குநர் மர்ம மரணம்

By 0 1120 Views

அர்ஜுன் நடித்த ‘ஆயுத பூஜை’, அஜித் நடித்த ‘ரெட்டை ஜடை வயசு’ படங்களின் இயக்குநர் சிவக்குமார். சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த இவர் மர்மமான முறையில் தான் வசித்துவந்த வீட்டின் உள்புறம் தாழிடப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார்.

மறைந்த இயக்குனர் சிவக்குமார் திருமணம் ஆகாதவர். தனித்து வசித்து வந்த நிலையில் மூன்று நாட்களாக இவர் வீட்டுக் கதவு திறக்கப்படாமலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையும் கண்ட எதிர் வீட்டினர் காவலதுறைக்குத் தகவல் அளித்திருக்கின்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று போலீஸார் பார்த்தபோது கையில் தொலைக்காட்சி ரிமோட்டுடன் சிறிது அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்த சிவக்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இரு தினங்களுக்கு முன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்.டு, வீட்டின் கதவு உள்புறம் பூட்டியிருந்த நிலையில் உதவிக்கு யாருமின்றி சிறிது நேரத்தில் மாரடைப்பினால் அவர் உயிர் பிரிந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இயக்குநர் சிவகுமாரின் அகால மரணம் கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது..!