January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பிரிட்டிஷ் கோடீஸ்வரரை மணக்கவிருக்கும் எமி ஜாக்ஸன்
January 2, 2019

பிரிட்டிஷ் கோடீஸ்வரரை மணக்கவிருக்கும் எமி ஜாக்ஸன்

By 0 914 Views

இனம் இனத்தோடுதான் சேரும் என்பது உண்மைதான். என்னதான் இங்கே தமிழுக்கு வந்து படங்களில் ரஜினி, ஆர்யாவையெல்லாம் ‘லவ்’வினாலும் நிஜத்தில் தன் நாட்டுக்காரரைத்தான் திருமணம் செய்யவிருக்கிறார் பிரிட்டிஷ் நடிகையான எமி ஜாக்ஸன்.

மதராசப் பட்டினம் தொடங்கி 2.ஓ வரை குறிப்பிடத்தகுந்த படங்களாக நடித்து இந்தி வரை போன எமி ஜாக்ஸன் இப்போது ஹாலிவுட் சீரியல் ஒன்றில் ஒப்பந்தமாகி அமெரிக்காவில் தங்கி நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தனது வலைப்பக்கத்தில் ஒரு பிரிட்டிஷ்காரருடன் நெருக்கமாக இருக்கும் படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அவருக்கு புத்தாண்டு தினத்தன்று திருமண நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாம். விரைவில் திருமண அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

இந்த எந்திர லோகத்து சுந்தரியை மணக்கவிருப்பவர் பெயர் ‘ஜார்ஜ் பனயோட்டோ’. பிரிட்டிஷ் தொழிலதிபரான இவர் அங்கே பெரும் கோடீஸ்வரராம்.

அதானே… கோடிகள் இல்லாவிட்டால் நடிகைகளை வளைக்க முடியுமா..?