April 24, 2024
  • April 24, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஒருவரிடம் காசு வாங்கி அடுத்தவருக்கு ஓட்டு போடும் தமிழக மக்கள்
May 7, 2019

ஒருவரிடம் காசு வாங்கி அடுத்தவருக்கு ஓட்டு போடும் தமிழக மக்கள்

By 0 822 Views

ஆர். பி .பிலிம்ஸ் சார்பில், ஆர்.பி.பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன்  தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகோரி ’. இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் பாக்யராஜ், நடிகை கஸ்தூரி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். 

இருவரும் பேசியதிலிருந்து…
 
கஸ்தூரி –
 
“தமிழர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். அதனால்தான் எங்கு போனாலும் அவர்களுக்கு மதிப்பு மரியாதை இருக்கிறது. தங்கள் திறமையால் தான் உலகில் எங்கு சென்றாலும்  முன்னணியில் இருக்கிறார்கள் – ஜெயிக்கிறார்கள். இந்தத்  திரைப்படத்திலும் பல திறமைசாலிகள் இருக்கிறார்கள். படத்தின் டிரைலர் டீசர் எல்லாம் பார்த்துவிட்டுப் பிடித்துப் போய் தான் இந்த விழாவிற்கு வந்தேன்.
 
காஞ்சனா இப்போது  வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த அகோரியும் அடுத்த காஞ்னாவாக இருக்கும் என்று நம்புகிறேன். கிராபிக்ஸ் காட்சிகளை பார்க்கும்போது பாகுபலிக்கு நிகரான காட்சிகளை உணர்ந்தேன்..!”
 
கே.பாக்யராஜ் –
 
“தமிழக மக்களை நினைத்தால் தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எந்தக் கட்சிக்காரன் காசு கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு, சத்தியம் செய்து கொடுக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். இவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று எண்ணி எண்ணியே எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.  
 
தயாரிப்பாளர் பாலா மொழி மாற்றுப் படங்களுக்கான வசனகர்த்தா என்று சொன்னார்கள். ‘புலி முருகன்’ மற்றும் ‘லூசிபர் ‘  ஆகிய படங்களுக்கு வசனம் எழுதி இருப்பதாகச் சொன்னார்கள். நான் ஒரே ஒரு டப்பிங் படத்திற்கு மட்டும்தான் வசனம் எழுதினேன். தாணுவின் வெளியீட்டில், ராம்சரண் நடித்த ‘மகதீரா’ என்ற படத்திற்கு மட்டும் தான் நான் தமிழில் வசனம் எழுதினேன். இதுவரைக்கும் நான் நேரடியாகத்தான் திரைப்படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறேன். மொழிமாற்று படங்களுக்கு எழுதியதில்லை. அங்கு சென்றவுடன் தான் அதில் உள்ள சவால்களும், சங்கடங்களும் புரிந்தன. 
 
‘அகோரி ’படத்திற்கு இந்த டைட்டில் பெரிய பிளஸ். எனக்கு ஒன்று தோன்றும். பேய் இருப்பது உண்மை என்றால், இந்த நாட்டில் போலீஸ் ஸ்டேஷன் என்பது இருக்காது. ஒருவரைக் கொலை செய்து விட்டால், அவர் பேயாக வந்து பழிக்குப் பழி வாங்கி கொன்றுவிடுவார். ஆனால் தற்போது கொலையாளியைப் போலீஸ்காரர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பேய் என்பது இல்லை என்று என்பது உறுதியாகிறது. ஆனால் பேய் வந்து பழிவாங்குகிறது என்று ஒரு கான்செப்ட் தற்போது மக்களால் ரசிக்கப்படுகிறது. 
 
அகோரி என்பதை நான் நெகட்டிவ் என்று நினைத்திருந்தேன். ஆனால் இவர்கள் அதனை பாசிட்டிவாக காட்டியிருப்பதாக நினைக்கிறேன்.அகோரியை பற்றி எத்தனை பேர், எத்தனை வகையில் கதை சொன்னாலும் நாம் கேட்டுக் கொண்டுதான் இருப்போம். நாம் சில விஷயங்களை எப்படி வேண்டுமானாலும் மாற்றி மாற்றிச் சொல்லலாம். மக்கள் அதை ரசித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
 
‘அகோரி’ என்ற டைட்டிலுக்கு ஏற்ற வகையில் மக்கள் நம்பும் வகையில் லாஜிக்குடன் சொல்லவேண்டும்.அப்படிசொல்லியிருப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த படம் வெற்றியைப் பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்..!”
 
இவ்விழாவில் படத்தின் டிரைலரை கே பாக்யராஜ் வெளியிட, நடிகை கஸ்தூரி பெற்றுக்கொண்டார்.

Aghori Audio Launch Still

Aghori Audio Launch Still