இரட்டை ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகக் களமிறங்கி ‘பாலைவனச் சோலை’ படத்தை அதே இரட்டையர்களில் ஒருவராக இருந்தி இயக்கி இப்போது டிவி சீரியல்களில் நடிகராக அறியப்படும் ராஜசேகர் இன்று காலை ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 62.
சென்னை அடையாறு திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவு பிரிவில் படித்த ராஜசேகர், தனது நண்பர் ராபர்ட் உடன் இணைந்து ‘ஒருதலை ராகம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். பிறகு, இந்த இரட்டையர்கள் ‘பாலைவனச்சோலை’ படத்தை இயக்கி பெருவெற்றி பெற்றனர்.
‘பாலைவனச்சோலை’ தவிர இந்த இரட்டையர் ஜோடி இயக்கிய மேலும் சில திரைப்படங்கள் – ‘மனசுக்குள் மத்தாப்பூ’, ‘சின்னப்பூவே மெல்லப் பேசு’, ‘தூரம் அதிகமில்லை’, ‘பறவைகள் பலவிதம்’, ‘தூரத்துப் பச்சை’, ‘கல்யாணக் காலம்’.
படங்களை இயக்கி வந்த ராஜசேகர், பாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’ படத்தில் கதாநாயகர்களில் ஒருவராகவும் நடித்தவர்…‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ பாடல் பாடிய பாத்திரத்தில் நடித்தவர் அவரே.
அதை வைத்து சின்னத்திரை நடிகராகவும் வலம் வந்தவர், ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் மூலம் புகழ் பெற்றார். சின்னத்திரை சங்கங்களிலும் பொறுப்பு வகித்துக் கொண்டிருந்தார்.
சமீப காலமாக உடல் நலம் சரியி்ல்லாமல் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்.
Related