ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’. இந்த படத்தில் முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ஐஸ்வர்யா, மஹிரா, ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடிக்கிறார்கள்.
எம்.பி.சிவகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பாலகணேஷ் இசையமைக்கிறார். ஜெமினி ராகவா தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி கே.எஸ்.முத்துமனோகரன் இயக்கியிருக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் முத்து மனோகரன் கூறுகையில், “இது ஒரு திரில்லர் படம். ஒரு ஆண் தவறு செய்தால் அந்த குடும்பம் மட்டும்தான் சிதையும். ஆனால் ஒரு பெண் தவறு செய்தால் சமுதாயமே பாதிக்கப்படும் என்ற கருத்தை சொல்கிறோம். அளவுக்கு அதிகமான சுதந்திரம் பெண்களையும் தவறு செய்ய தூண்டும். அதனால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.
படத்தில் இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுத்திருக்கிறோம். ஒரு கோடிக்கு அதிகமாக செலவிட்டு 2000 முதலைகளை 15 நாட்களாக ஒரே இடத்தில் வைத்து அவற்றுக்கு உணவாக சிக்கன், மாட்டிறைச்சி போன்றவற்றை டன் கணக்கில் போட்டு மிகவும் சிரமப்பட்டு எடுத்தோம்.
கிளைமாக்ஸ் காட்சியில் அனைத்து முதலைகளும் ஒன்றாக சேர்ந்து வருவது போல் ஒரு காட்சி இருக்கிறது அந்த காட்சியை திரையில் பார்க்க படு த்ரில்லாக இருக்கும். அதுதான் இந்த படத்தின் ஹைலைட்..!” என்றார்.
படம் விரைவில் வெளியாக உள்ளதாம்..!
படத்தோட ஸ்டில்லைப் பார்த்தால் பெண்களைக் குறிவைக்கும் வேறு சில முதலைகளும் படத்தில் இருக்கும் போலிருக்கே..?