July 20, 2025
  • July 20, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஜிப்ரான் இசையில் சிக்ஸர் படத்துக்காக பாடிய அனிருத்
July 6, 2019

ஜிப்ரான் இசையில் சிக்ஸர் படத்துக்காக பாடிய அனிருத்

By 0 810 Views

ஜிப்ரான் இசையமைக்கும் ‘சிக்ஸர்’ படத்தில் அனிருத் ஒரு துள்ளலான ராப் பாடலை பாடியிருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் இது குறித்து கூறும்போது, “இது எனக்கு ஒரு புதிய அனுபவம். முதலாவதாக, சகோதரர் சிவகார்த்திகேயன், லோகன் எழுதிய ஒரு புதுமையான ‘லவ் கானா’வை பாடிக் கொடுத்தார். இப்போது, எனர்ஜியுடன் அனிருத் ஒரு ராப் பாடலை பாடியிருப்பது ஆல்பத்தை இன்னும் உயர்த்தியுள்ளது.

இயல்பான தன்னார்வத்துடன் மிகச்சரியாக பாடிக்கொடுக்க அவர் எடுக்கும் முயற்சி என்னை ஆச்சரியப்படுத்தியது. இது குழுவில் உள்ள எங்களுக்கு மட்டுமல்லாமல், பாடலை கேட்கும் அனைவருக்கும் அற்புதமாக இருக்கும் என நான் உறுதியாக இருக்கிறேன்..!” என்றார்.

வைபவ், பாலக் லால்வானி நடித்த ‘சிக்ஸர்’ படத்துக்கு சிவகார்த்திகேயனின் ‘லவ் கானா’ கூடுதல் சுவையை ஊட்டியது. இப்போது அனிருத்தின் குரலும் இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகமூட்டுகிறது.

டிரைடண்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரனுடன் இணைந்து வால்மேட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்காக தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் ‘சிக்ஸர்’ படத்தை தயாரிக்கிறார்கள். சாச்சி எழுதி இயக்கியுள்ள இந்த படத்துக்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

‘சிக்ஸர்’ திரைப்படம் அதன் இறுதிகட்ட பணிகளில் இருக்கிறது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

Anirudh Sings in Ghibrans Album

Anirudh Sings in Ghibrans Album