September 3, 2025
  • September 3, 2025
Breaking News
November 5, 2019

மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு

By 0 844 Views

பிக்பாஸ் சீசன் 3 ல் இடம்பெற்ற ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டம் வென்ற நடிகை மீரா மிதுன் கடந்த 3-ம் தேதியன்று சென்னை எழும்பூரில் உள்ள ‘ரேடிசன் புளூ’ ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பிக்பாஸில் இடம்பெற்றதற்கு தனக்கு உரிய பணம் தரவில்லை என்றும், இனியும் தாமதித்தால் விஜய் டிவி அதற்கான விளைவைச் சந்திக்கும் என்று கூறியிருந்தார்.

அத்துடன் லஞ்சம் வாங்கிக்கொண்டு போலீஸ் தன்மேல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததாகவும் அவர் காவல்துறையைக் குற்றம் கூறினார். 

இந்நிலையில் இன்று காவல்துறையைக் கண்ணியக்குறைவாக பேசியத்ற்கும், அதைத் தட்டிக்கேட்ட ஹோட்டல் ஊழியரைத் தரக்குறைவாகப் பேசி கொலைமிரட்டல் விடுத்ததாகவும் இன்று காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஏற்கனவே மே மற்றும் ஆகஸ்ட் மாதம் ‘மீரா மிதுன்’ மீது பதியப்பட்ட வழக்குகள் நிளுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பரபரப்புக்குப் பெயர்தான் மீரா மிதுனா..?