June 2, 2023
  • June 2, 2023
Breaking News

Monthly Archives: September 2019

விஜய்க்கு வில்லனாகிறார் விஜய் சேதுபதி

by on September 30, 2019 0

விஜய் சேதுபதி போல் ஒரு நடிகர் கிடைத்தது தமிழ் ரசிகர்கள் செய்த புண்ணியம் என்றுதான் சொல்ல வேண்டும். நடிப்புதான் முக்கியம், நட்சத்திர அந்தஸ்து முக்கியமில்லை என்று உணர்ந்தும், நடந்தும் வருபவர். செல்வாக்குள்ள ஹீரோவாக வளர்ந்தும், பல படங்களில் ஹீரோவாக நடித்தும் வரும் வேளையிலேயே ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவனுக்கு வில்லனாகி அசத்தினார். இப்போது விஜய்யின் முறை. லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் ‘விஜய் 64’ படத்தில் விஜய்க்கு வில்லனாக இருப்பவர் விஜய் சேதுபதியேதான். விஜய் 64 படத்தில் விஜய் […]

Read More

எம்ஜிஆர் மகன் படப்பிடிப்பு பொதுமக்களால் நிறுத்தம்

by on September 30, 2019 0

இரண்டு நாள்கள் முன்னர்தான் கார்த்தி நடிக்கும் சுல்தான் படப்பிடிப்பு திண்டுக்கல் கோட்டையில் வைத்து இந்து அமைப்புகளால் முற்றுகையிட்டு நிறுத்தப்பட்டது. இப்போது சசிகுமார் நடிக்க பொன்ராம் இயக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு பொதுமக்கள் தலையீட்டால் போலீஸ் விசாரணைக்குள்ளாகி படப்பிடிப்புக்கு பயன்பட்ட ஆம்புலன்ஸ் சிறைபிடிக்கப்பட்டது. விஷயம் இதுதான். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் செயல்பட்டு வருகிறது.இங்கே தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். இங்குள்ள மருத்துவக்கல்லூரியில்தான் முதலாம் ஆண்டு இளங்கலை மருத்துவம் […]

Read More

நெட்டில் கசிந்தது பிகில் டீஸர்தானா..?

by on September 29, 2019 0

ஏற்கனவே ‘பிகில்’ படத்தின் ‘சிங்கப் பெண்ணே’, ‘வெறித்தனம்’ பாடல்கள் வெளியிடப்படும் முன்னரே நெட்டில் கசிந்துவிட, இன்று அதிக எதிர்பார்ப்பிலுள்ள ‘பிகில்’ டீஸர் கசிந்துவிட்டதாக சில டீஸர்கள் உலா வருகின்றன. முதல் விஷயம் அது படக்குழுவால் வெளியிடப்பட்ட டீஸர் போல் தெரியவில்லை. இரண்டாவதாக ஒரு டீஸருக்கும் இன்னொன்றுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இதுவே சொல்லிவிடும் இரண்டுமே உண்மையில்லை என்று. அத்துடன் விஜய் ரசிகர்களுக்காக இயங்கிவரும் ட்விட்டர் பக்கங்களும் இது ரசிகர்கள் ஆர்வமிகுதியால் செய்த வேலை என்று அறிவித்திருக்கின்றனர். சரி… ஏன் […]

Read More

கறிக்கடை உரிமையாளர்களை கூல் ஆக்கிய விஜய் ரசிகர்கள்

by on September 29, 2019 0

கடந்த சில தினங்களுக்கு முன் கோவையில் பிகில் படத்துக்கு எதிராக கறிக்கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்த தகவலைத் தெரிவித்திருந்தோம். பிகில் போஸ்டர் புகைப்படத்தில் கறி வெட்டும் கட்டை மேல் விஜய் கால்வைத்து உட்கார்ந்திருந்த காரணத்தால் கறிக்கடை உரிமையாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகில் பட போஸ்டர்களைக் கிழித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் கொதிப்படைந்திருந்த கறிக்கடை உரிமையாளர்களை சமாதானப்படுத்தும் நோக்கில் கோவை மாவட்ட விஜய் ரசிகர்கள் ஒரு நூதனமான பணியை மேற்கொண்டனர். அதன்படி […]

Read More

பொதுத் துறை ஊழியர்களுக்கு தமிழக அரசின் போனஸ் அறிவிப்பு

by on September 28, 2019 0

தமிழக அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்… மாநில அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன் படி போனஸ் பெற உச்சவரம்பு ரூ. 21 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் குரூப் சி-டி ஊழியர்களுக்கு 2018-2019-ம் ஆண்டுக்கான போனஸ் 8.33 மற்றும் ஊக்கத்தொகை 1.67 சதவீதம் என மொத்தம் […]

Read More

நான் ஒரு கோடி சம்பளம் வாங்க கூடாதா – அப்புக்குட்டி

by on September 28, 2019 0

கதிர் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ‘பால் டிப்போ ’கதிரேசன் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘வாழ்க விவசாயி’. தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பி. எல் .பொன்னி மோகன். அறிமுக இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீடு நேற்று நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் தயாரிப்பாளர் ‘பால் […]

Read More