July 27, 2024
  • July 27, 2024
Breaking News

Monthly Archives: June 2018

கர்நாடகாவின் புதிய செயல்பாடு குறித்து விவாதிக்க முதல்வரிடம் ஸ்டாலின் கோரிக்கை

by on June 30, 2018 0

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பேர் நியமிக்கப்பட்ட நிலையில் ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும், மத்திய அரசு பிரதிநிதிகளும் பங்கேற்கும் இக்கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ள நிலையில், கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் குமாரசாமி இன்று அழைப்பு விடுத்தார். குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்ற […]

Read More

ஜூலை 20 முதல் 68 லட்சம் லாரிகள் ஓடாது..!

by on June 30, 2018 0

தென் மாநில மோட்டார் போக்குவரத்து உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் வரும் ஜூலை 20-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.சண்முகப்பா கூறியதிலிருந்து… “சுங்கச் சாவடிகளை முற்றிலும் அகற்ற வேண்டும். நாடு முழுவதும் இயங்கும் 68 லட்சம் லாரிகளுக்கு ஒரு லாரிக்கு ரூ.50 ஆயிரம் வீதம் சுங்கக் கட்டணத்தை ஆண்டுக்கு ஒருமுறை என்ற அடிப்படையில் நாங்கள் செலுத்துவதாக கூறுகிறோம். இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்காமல் உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே மூன்று முறை […]

Read More

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாரூர் ஏரியில் நீர் திறப்பு – முதல்வர்

by on June 28, 2018 0

பாரூர் ஏரியில் இருந்து வருகிற 1-ந்தேதி முதல் சுழற்சி முறையில் தண்ணீர் திறப்பது குறித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் இருந்து… “கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அதை ஏற்று போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல் போக […]

Read More

எலைட் குடிமகன்களுக்கு இடி விழும் செய்தி

by on June 28, 2018 0

நேற்று (27-06-2018) மாலை 4.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடியது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்பட அனைத்து அமைச்சர்களுடன் தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், வணிக வரித்துறை செயலாளர் பாலச்சந்திரன், டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிரிலோஷ்குமார் ஆகியோரும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறையைக் குறைத்து வருவாயை அதிகரிக்கவும், வெளிநாட்டு இறக்குமதி மதுக்களுக்கான ஆயத்தீர்வையை அதிகரிப்பது பற்றியும் […]

Read More

ஏதேதோ பாடல் ‘ரெஜினா ஆர்மி’ அமைக்கும் – மிஸ்டர் சந்திரமௌலி சுவாரஸ்யம்

by on June 27, 2018 0

ஜூலை 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது ‘கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸு’ டன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் தயாரித்திருக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. ‘திரு’ இயக்கத்தில் தந்தை, மகனான நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் முதன் முறையாக தந்தை மகனாகவே இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரெஜினா கஸாண்ட்ரா, வரலக்ஷ்மி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன் ஆகியோர் நடிக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் படைப்பாளிகள் […]

Read More

ஸ்ரீரங்கம் சென்றால் மட்டும் சிஎம் ஆக முடியாது – அமைச்சர் ஜெயக்குமார்

by on June 27, 2018 0

கடந்த சில தினங்களுக்கு முன் திமுக பிரமுகரின் இல்ல திருமண நிகழ்வுக்கு ஸ்ரீ ரங்கம் சென்ற திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அங்கு அரங்கநாத சுவாமி கோவில் வாசலில் அளிக்கப்பட்ட பூரணகும்ப மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதுபற்றி பிற கட்சிப் பிரமுகர்களும், வலை தளங்களிலும் பலவாறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஸ்டாலின் கோவிலுக்குச் செல்லவில்லை எனவும், அவர்களாக முன்வந்து அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்டார் எனவும் திமுக தரப்பில் சொல்லப்படும் நிலையில் இன்று பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் மு.க.ஸ்டாலின் […]

Read More