June 19, 2025
  • June 19, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • வெல்கம் பேக் காந்தி படத்தில் வைக்கம் விஜயலட்சுமி பாடல் வீடியோ
October 2, 2019

வெல்கம் பேக் காந்தி படத்தில் வைக்கம் விஜயலட்சுமி பாடல் வீடியோ

By 0 875 Views

அனைவருக்கும் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்ததின நல் வாழ்த்துகள்..!

அ.பாலகிருச்ணன் இயக்கி வரும் ‘வெல்கம் பேக் காந்தி’ படச் செய்தியை இன்று வெளியிடுவது பொருத்தமாக இருக்கும். ஆங்கிலம், இந்தியில் உருவாகும் இப்படத்தினை ‘காமராஜ்’ திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யுனிகேஷன்ஸ் நிறுவத்தினர் தயாரித்துள்ளனர்.

‘ஏக்லா சலோ ரே. என்பது ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற வங்கமொழி பாடல். “உன்னை யாரும் பொருட்படுத்தாவிடினும் உனது பாதையில் தன்னந்ததனியாக நீ நடந்து செல்…”.என்பது இதன் முதல் வரி. மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது.

இந்தப் பாடலுக்கு ஏற்கனவே ஏ ஆர் ரஹ்மான், விஷால் சேகர் போன்ற புகழ்பெற்ற இசைஅமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளனர். கிஷோர் குமார் அமிதாப் பச்சன் போன்றவர்களால் அவ்வப்போது சில தேசபக்தி படங்களுக்காகப் இப்பாடல் பாடப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி நவகாளியில் யாத்திரை மேற்கொண்டிருந்தபோது அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் இந்தப் பாடலைப் பாடி அவரை வரவேற்றனர்.

இந்நிலையில் வெல்கம் பேக் காந்தி படத்துக்காக வைக்கம் விஜயலட்சுமி குரலில் இப்பாடல் பதிவு செய்யப்பட்டது. இப்பாடலின் ஆடியோ பதிவினை மகாத்மா காந்தியிடம் தனிச்செயலராக பணிபுரிந்த 98 வயதான திரு. வி. கல்யாணம் அவர்கள் அண்மையில் வெளியிட்டு வாழ்த்திப் பேசினார்.

இப்பாடலுக்கான காட்சிகள் இந்தியாவெங்கும் பல இடங்களில் ஏற்கனெவே படமாக்கப் பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவு பெற்று படம் வெளியாகும் தருணத்தில் உள்ளது. கீழே வைக்கம் விஜயலட்சுமி பாடிய பாடல் வீடியோ…