எம்.ஜி.எம். புற்றுநோய் மையத்தின் சார்பில் மார்பக புற்றுநோய் வாக்கத்தான் விழிப்புணர்வு!!
சென்னை, 30 அக்டோபர் 2022: எம்.ஜி.எம். புற்றுநோய் மையத்தின் சார்பில் மார்பக புற்றுநோய் குறித்த வாக்கத்தான் விழிப்புணர்வு நிகழ்ச்சியை (பிங்க் அக்டோபர்) ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 30) நடத்தியது.
வாக்கத்தான் நிகழ்ச்சியை காவல்துறை துணை கமிஷனர் திரு சி.விஜயகுமார், எம்.ஜி.எம். புற்றுநோய் மையத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திரு எம்.கே.மோகன் எம்.எல்.ஏ. மற்றும் திரைப்பட நடிகையும், இயக்குநர் சமூக ஆர்வலருமான ரேவதி ஆகியோர் வாக்கத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களை வரவேற்று, மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.
சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். புற்றுநோய் மையத்தில் இருந்து அக்டோபர் 30-ம் தேதி காலை 6 மணிக்கு தொடங்கியது.
இந்த வாக்கத்தான் அண்ணா நகர் டவர் பூங்கா வரை சென்றது. வாக்கத்தான் நிகழ்ச்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மேலும் பயிற்சி பெற்ற நிபுணர்களால் ஜூம்பா வகுப்புகளும், மார்பக புற்றுநோய் குறித்து மருத்துவர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.
வாக்கத்தான் நிகழ்ச்சியில் டிஜி.வைஷ்ணவ கல்லூரி மற்றும் கிருஷ்ணசாமி கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிங்க் அக்டோபர் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் கொண்டாடப்படுகிறது. மார்பக புற்றுநோயில் இருந்து விலகி இருப்போம் மற்றும் ஒன்றாக இணைந்து மார்பக புற்றுநோயை தடுப்போம் என்ற கருப்பொருளை மையப்படுத்தி மார்பக புற்றுநோயை தடுத்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வாக்கத்தான் நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
மார்பக புற்றுநோய் குறித்த வாக்கத்தான் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் புற்றுநோய் சேவைகளின் மருத்துவ ஆலோசனை வாரியத்தின் தலைவர் மூத்த ஆலோசகர் டாக்டர் எம்.ஏ.ராஜா பேசுகையில், எம்.ஜி.எம். ஹெல்த்கேர் எப்போதும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த ஊக்கமளிக்கிறது. மேலும் புற்றுநோயால் பாதித்தவர்களுக்கு மிகுந்த ஆதரவை வழங்கி வருகிறது. சமுதாயத்தில் மார்பக புற்றுநோய் ஏற்படுத்தும் பாதிப்பை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணமாகும்.
இதுபோன்ற விழிப்புணர்வு மூலம் பெண்கள் மார்பக புற்றுநோய் குறித்த HEALTHCARE அறிந்து கொள்ளவும், அதன் மூலம் போதிய விழிப்புணர்வை பெறவும், முன்கூட்டியே தயாராக இருக்க வைப்பது நோக்கமாகும் என்றார்.