May 4, 2024
  • May 4, 2024
Breaking News
August 14, 2023

விவ்ரிட்டி கேபிடல் லிமிடெட் NCDகள் மூலம் ரூ.500 கோடி வரை திரட்டுகிறது..!

By 0 331 Views

விவ்ரிட்டி கேபிடல் லிமிடெட்
(முன்னதாக விவ்ரிட்டி கேபிடல் பிரைவேட் லிமிடெட் என அறியப்பட்டது) NCDகள் மூலம் ரூ. 500 கோடி வரை திரட்ட இருக்கிறது

வெளியீடு தொடங்கும் நாள்:

வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 18, 2023
வெளியீடு முடிவடையும் நாள்: முன்கூட்டியே முடித்தலுக்கான விருப்பத்துடன்…

வியாழக்கிழமை, ஆகஸ்ட் 31, 2023.

 பொது வெளியீட்டில் ரூ.250 கோடி வரையிலான ஒரு அடிப்படை வெளியீட்டு அளவை உள்ளடக்குகிறது. மற்றும் ரூ. 250 கோடி வரையிலான ஒரு கிரீன் ஷூ விருப்பம்

 ஒவ்வொரு விண்ணப்பமும் மொத்தமாக அனைத்துத் தொடர்களிலும் குறைந்தபட்சம் 10 NCD களாகவும், அதன்பின் 1 NCD இன் மடங்குகளாகவும் இருக்க வேண்டும் (தனியாக அல்லது கூட்டாக எடுக்கப்பட்ட அனைத்து NCD களுக்கும்).

 NCDகளுக்கான ஒவ்வொரு விண்ணப்பத்திற்கான குறைந்தபட்ச விண்ணப்ப அளவு அனைத்து தொடர்களிலும் கூட்டாக ₹10,000 ஆகவும் அதன்பின் ₹1,000 இன் மடங்குகளிலும் இருக்கும்.

 முன்மொழியப்பட்ட இந்த NCD களின் பொது வெளியீடு ICRA லிமிடெட் [ICRA] மூலம் A (Stable) எனவும் கேர் ரேட்டிங்ஸ் லிமிடெட் மூலம் A Positive எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

 தொடர் I முதல் தொடர் V வரை வெவ்வேறு காலமுறை வட்டி செலுத்துதல் மற்றும் கூப்பன் விகிதங்களுடன் 9.98% முதல் 10.49%* வரையிலான பயனுள்ள வருவாயை முதலீட்டாளர்கள் பெறலாம்.

சென்னை, ஆகஸ்ட் 11, 2023: ஒரு வைப்பு மேற்கொள்ளாத முறையாக முக்கியமான வங்கி சாரா நிதி நிறுவனமாக (NBFC-ND-SI) ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ள விவ்ரிட்டி கேபிடல் லிமிடெட்

(“கம்பெனி” அல்லது “VCL”), ஒரு ஒட்டுமொத்த திரட்டுதலாக ₹ 500 கோடி (“வெளியீட்டு அளவு” அல்லது “வெளியீடு வரம்பு”) வரை மொத்தமாக 50 லட்சம் NCDகள் வரை ₹ 250 கோடி வரை அதிக சந்தாவைத் தக்கவைத்துக் கொள்ளும் ஒரு விருப்பத்துடன் (“கிரீன் ஷூ விருப்பம்”), பாதுகாக்கப்பட்ட, மதிப்பிடப்பட்ட, பட்டியலிடப்பட்ட, மீட்டெடுக்கக்கூடிய, மாற்ற முடியாத கடனீட்டுப் பத்திரங்களின் (“NCD”) ஒவ்வொன்றும் ₹ 1,000 முகமதிப்புள்ள ₹ 250 கோடி (“அடிப்படை வெளியீட்டு அளவு”) வரை ஒரு பொது வெளியீட்டைத் தொடங்க முன்மொழிகிறது. NCD களின் இந்த பொது வெளியீடு ஆகஸ்ட் 18, 2023 அன்று திறக்கப்பட்டு முன்கூட்டியே மூடுவதற்கான விருப்பத்துடன். ஆகஸ்ட் 31, 2023 அன்று முடிவடையும்.

*இந்த பொது வெளியீடு வெவ்வேறு கால வரையறைகளில் வட்டி செலுத்துதல் மற்றும் கூப்பன் விகிதங்களுடன் தொடர் I முதல் தொடர் V வரை கொண்டுள்ளது. தொடர் I, 18 மாதங்களின் ஒரு கால வரையறை மற்றும் கூப்பன் வீதம் வருடத்திற்கு 9.57% (மாதாந்திரம் செலுத்துதல்) மற்றும் ஆண்டுக்கு 9.98% ஒரு பயனுள்ள வருவாயைக் கொண்டுள்ளது.

தொடர் II, 18 மாதங்களின் ஒரு கால வரையறை மற்றும் கூப்பன் வீதம் வருடத்திற்கு 10% (ஆண்டுதோறும் செலுத்துதல்) மற்றும் ஆண்டுக்கு 10.06% ஒரு பயனுள்ள வருவாயைக் கொண்டுள்ளது. தொடர் III, 24 மாதங்களின் ஒரு கால வரையறை மற்றும் கூப்பன் விகிதம் ஆண்டுக்கு 9.65% ( ஒரு காலாண்டு அடிப்படையில் செலுத்தப்படுகின்ற, #முதன்மை மீட்பு அட்டவணையின்படி NCDகளின் மீட்புத் தொகையுடன் அசல் நிலுவைத் தொகையில் மற்றும் ப்ராஸ்பெக்டஸில் வழங்கப்பட்டுள்ளபடி தொடர் III NCDகளுக்கான மீட்புத் தொகைகள் அசல் நிலுவையில் உள்ள ஒதுக்கீட்டுத் தேதியிலிருந்து ஒவ்வொரு காலாண்டின் தொடர்புடைய மாதத்தின் அதே தேதியில் தொடர்புடைய வட்டியும் செலுத்தப்படும்.)

மற்றும் ஆண்டுக்கு 9.98% ஒரு பயனுள்ள வருவாயைக் கொண்டுள்ளது. தொடர் IV, 24 மாதங்களின் ஒரு காலவரையறை மற்றும் ஆண்டுக்கு 10.03% கூப்பன் வீதம் (மாதாந்திரம் செலுத்தப்படும்) மற்றும் ஆண்டுக்கு 10.49% ஒரு பயனுள்ள வருவாயைக் கொண்டுள்ளது. தொடர் V, 24 மாதங்களின் ஒரு காலவரையறை மற்றும் கூப்பன் வீதம் 10.50% (ஆண்டுதோறும் செலுத்தப்படும்) மற்றும் ஆண்டுக்கு 10.48% இன் ஒரு பயனுள்ள வருவாயைக் கொண்டுள்ளது.

விவ்ரிட்டி கேப்பிடல் லிமிடெட் இன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் வினீத் சுகுமார் கூறுகையில், ” விவ்ரிட்டி கேபிடல் லிமிடெட் நிறுவனத்தின் முதல் பொது வெளியீடு எங்கள் வளர்ச்சி

பயணத்தில் ஒரு திருப்புமுனையாக இருக்கிறது. எங்கள் வாடிக்கையாளர்கள் நடுத்தர அளவிலான நிறுவனங்களாக இருக்கின்றன. எங்கள் வாடிக்கையாளர் அனுபவத்தையும் அவர்களின் செயல்பாட்டுத் திறனையும் மேம்படுத்த புதுமையான கடன் தீர்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.

நிறுவனத்தின் தொழில்நுட்ப மேம்பட்ட இயக்க மாதிரி மற்றும் இடர் மேலாண்மை கட்டமைப்பின் காரணமாக, நெகிழ்வுத்தன்மை மற்றும் குறுகிய செயலாக்க நேரங்களுடன் கடன் நிதியின் தொந்தரவு இல்லாத விநியோகத்தை நாங்கள் வழங்கியுள்ளோம். நாங்கள் 5,835.80 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு போர்ட்ஃபோலியோவை நிர்வகித்து வருகிறோம், மேலும் பல்வேறு துறைகளில் உள்ள 194 க்கும் மேற்பட்ட நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் தீர்வுகளை வழங்கியுள்ளோம்.

கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் எங்கள் கடன் புத்தகத்தை வலுவாக வளர்த்துள்ள நிலையில், இன்றுவரை ஒரு ஆரோக்கியமான சொத்துத் தரத்தை தொடர்ந்து பராமரித்து வருகிறோம்.”என்று கூறினார்.

விவ்ரிட்டி கேபிடல் லிமிடெட் இன் தலைமைக் கருவூல அதிகாரி பார்த் சங்கானி மேலும் கூறுகையில், ” 2023 மார்ச் 31 நிலவரப்படி, பல ஆண்டுகளாக அதிகரித்து வரும் மற்றும் 218 நிறுவன கடன் வழங்குநர்கள்/முதலீட்டாளர்களை உள்ளடக்கிய ஒரு பெரிய மற்றும் பலதரப்பட்ட கடன் வழங்குநர்களின் கலவையிலிருந்து எங்களது மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்களின் ஒரு வரம்பு அத்துடன் 1,740 தனிப்பட்ட முதலீட்டாளர்களைக் கொண்டு நாங்கள் பயனடைகிறோம்.

எங்களின் சிறந்த நிறுவன மேலாண்மை, நிலையான கடன் மதிப்பீடுகள், பாரம்பரிய இடர் மேலாண்மைக் கொள்கைகள், மூலோபாய பொறுப்பு மேலாண்மை மற்றும் வெளிப்படையான தொடர்பு ஆகியவற்றின் காரணமாக எங்களால் ஒரு பரந்த அளவிலான கடன் வழங்குநர்களை அணுக முடிந்தது என்று நாங்கள் நம்புகிறோம். எங்களின் நிதியியல் கலவையை பலதரப்பட்டதாக தொடர்ந்து வைத்திருக்கவும், எங்களின் நிதிச் செலவைக் குறைக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

எங்கள் தொடக்கத்தில் இருந்து, எங்கள் கடன் நடவடிக்கைகளை பன்முகப்படுத்தவும் அதன் மூலம் எந்த ஒரு நிதி ஆதார வகையையும் அதிகமாகச் சார்ந்திருப்பதில் இருந்து எங்கள் நிறுவனத்தை அபாயத்திலிருந்து நீக்குவதற்கும், நாங்கள் பல்வேறு பரஸ்பர நிதிகள்,

பொதுத்துறை வங்கிகள், சிறு நிதி வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் NBFC களுடன் கூட்டு சேர்ந்துள்ளோம். சமீபத்திய காலங்களில் எங்களின் நிதி ஆதாரங்களின் பல்வகைப்படுத்தல், சமீபத்திய நிதிக் காலங்களில் எங்களது சராசரி கடன் செலவில் ஒரு ஒட்டுமொத்தக் குறைப்புக்கு பங்களித்துள்ளது மற்றும் போதுமான வட்டி வரம்புகளை பராமரிக்கவும், எங்கள் பணப்புழக்க இலக்குகளை அடையவும், அத்துடன் நிதி நிலைத்தன்மையை பராமரிக்கவும் எங்களை அனுமதித்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட கடன் மதிப்பீடுகள் மற்றும் எங்கள் கடன் வாங்கும் சுயவிவரத்தை பன்முகப்படுத்துவதன் மூலம் எங்கள் நீண்ட கால கடன்களின் சராசரி செலவைக் குறைக்க முயல்கிறோம்.”என்று கூறினார்.

வெளியீட்டில் இருந்து வரும் மொத்தத் தொகையில் குறைந்தபட்சம் 75% ஐ கடன் வழங்குதல், நிதியளித்தல் மற்றும் நிறுவனத்தின் தற்போதைய கடன்களின் வட்டி மற்றும் அசலைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் வெளியீட்டில் இருந்து வரும் மொத்தத் தொகையில் அதிகபட்சம் 25% வரை பொது நோக்கத்திற்கான செலவுகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்த இந்த நிறுவனம் முன்மொழிகிறது.

வகை I முதலீட்டாளர் – நிறுவன முதலீட்டாளர்கள்; வகை II முதலீட்டாளர் – நிறுவனமல்லாத முதலீட்டாளர்கள், வகை III முதலீட்டாளர் – அதிக நிகர மதிப்புள்ள தனிநபர் முதலீட்டாளர்கள்: இந்த வெளியீட்டில் உள்ள NCDகளின் அனைத்து விருப்பங்களிலும் மொத்தம் 1,000,000 க்கும் அதிகமான தொகைக்கு விண்ணப்பிக்கின்ற கர்த்தா மூலம் வசிக்கும் இந்திய தனிநபர்கள் அல்லது இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் ஆகியோர் முத்தலீட்டாளர்களுக்கான பல்வேறு பிரிவினர் ஆவர்.

வகை IV முதலீட்டாளர் – சில்லறை தனிப்பட்ட முதலீட்டாளர்கள்: கர்த்தா மூலம் வசிக்கும் இந்திய தனிநபர்கள் அல்லது இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் இந்த வெளியீட்டில் உள்ள NCD களின் அனைத்து விருப்பங்களிலும் சேர்த்து ₹1,000,000 வரை மற்றும் UPI மெக்கானிசம் மூலம் வெளியீட்டில் உள்ள ஏல விருப்பங்களில் ஏதேனும் ₹500,000க்கு மிகாமல் ஒரு தொகைக்கு ஏலத்தைச் சமர்ப்பிக்கும் சில்லறை தனிப்பட்ட முதலீட்டாளர்களையும் உள்ளடக்கும்.

(அவர்களின் கர்த்தா மூலம் விண்ணப்பிக்கும் HUFகள் மற்றும் NRIகள் உட்பட) .
CARE ரேட்டிங் இன் ஜூன் 12, 2023 தேதியிட்ட கிரெடிட் ரேட்டிங் கடிதம் மற்றும் கிரெடிட் ரேட்டிங் மதிப்புறு (மற்றும் ஜூலை 11, 2023 மற்றும் ஆகஸ்ட் 4, 2023 தேதியிட்ட மறுமதிப்பீட்டுக் கடிதங்கள்) NCDகளுக்கு

“CARE A; Positive” என்ற ஒரு மதிப்பீட்டை வழங்கியது. ICRA லிமிடெட் இன் ஜூன் 7, 2023 தேதியிட்ட கிரெடிட் ரேட்டிங் கடிதம் மற்றும் கிரெடிட் ரேட்டிங் மதிப்புறு (மற்றும் ஜூலை 12, 2023 மற்றும் ஆகஸ்ட் 7, 2023 தேதியிட்ட மறுமதிப்பீட்டு கடிதங்கள்) NCD களுக்கு “[ICRA] A (Stable)” என்ற ஒரு மதிப்பீட்டை வழங்கியது.

இந்த ப்ராஸ்பெக்டஸ் மூலம் வழங்கப்படும் NCDகள் BSE Limited (“BSE”) (“Stock Exchange”) இல் பட்டியலிட முன்மொழியப்பட்டுள்ளது. BSE என்பது இந்த வெளியீட்டிற்கான நியமிக்கப்பட்ட பங்குச் சந்தையாகும்.
ஜேஎம் பைனான்சியல் லிமிடெட் இந்த பொது வெளியீட்டின் முன்னணி மேலாளர் ஆவர்.
பதிப்பாசிரியர் குறிப்புகள்
விவ்ரிட்டி கேபிடல் லிமிடெட் பற்றி
விவ்ரிட்டி கேபிடல் லிமிடெட் (முன்னர் விவ்ரிட்டி கேபிடல் பிரைவேட் லிமிடெட் என அறியப்பட்டது)

(“Vivriti” அல்லது “Company”) ரிசர்வ் வங்கியில் ஒரு வைப்பு எடுக்காத, முறையாக முக்கியமான வங்கி சாரா நிதி நிறுவனமாக (NBFC-ND-SI) பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஜூன் 22, 2017 அன்று இந்தியாவில் சென்னையில் தொடங்கப்பட்டது. விவ்ரிட்டி கேபிடல் ஆனது,

நிறுவனத்தின் குழுவில் உள்ள அவர்களின் பிரதிநிதிகள் உட்பட செயல்பாடுகளுக்கு அவர்களின் நிபுணத்துவத்தை வழங்குகிற கிரியேஷன் இன்வெஸ்ட்மெண்ட்ஸ், லைட் ராக் மற்றும் டிவிஎஸ் கேபிடல் போன்ற முக்கிய நிறுவன முதலீட்டாளர்களால் ஆதரிக்கப்படுகிறது. விவ்ரிட்டி நடுத்தர கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் திட்டங்களை வழங்குகிறது. அத்தகைய திட்டங்களில் கால கடன்கள், செயல்பாட்டு மூலதன தேவை கடன்கள், நிதி பங்குதாரர்களுடன் இணைந்து கடன் வழங்குதல், வரவு சீட்டுக்களை பத்திரப்படுத்துதல், வரவு சீட்டுகளின் நேரடி வழங்குதல், விநியோக சங்கிலி நிதி மற்றும் பத்திரங்கள் மற்றும் வணிகத் தாள்களுக்கான சந்தா ஆகியவை அடங்கும்.

எங்கள் கடன் வழங்கும் தயாரிப்புகள் மூலம் அவர்கள் ஒரு பரந்த அளவிலான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறார்கள் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலமும் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட நிதி தீர்வுகளை வழங்குவதன் மூலமும் நிதிச் சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறார்கள். இந்த இலக்கு வாடிக்கையாளர்களில், அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிதியை எளிதாக அணுக அனுமதிக்காத மதிப்பிடப்படாத அல்லது மதிப்பீடுகள் உள்ள மற்றும் முதன்மையாக நகர்ப்புற / அரை நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த நிறுவனங்கள் அடங்குவார்கள். அவர்களின் தயாரிப்புகளில் கால கடன்கள், செயல்பாட்டு மூலதன தேவை கடன்கள், கடன் வாங்கியவர் வழங்கிய பத்திரங்களில் முதலீடுகள், கடன் வாங்கியவர்களால் வழங்கப்பட்ட வணிக ஆவணங்களுக்கான சந்தா ஆகியவை அடங்கும்.

இந்த நிறுவனம், ஹெல்த்கேர், பார்மா, லாஜிஸ்டிக்ஸ், சில்லறை வணிகம், வர்த்தகம், எஃகு, வாகனம், உற்பத்தி, நிதிச் சேவைகள் மற்றும் உடனுக்குடன் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் ஆகிய வணிகங்களில் உள்ள நிறுவனங்கள் உட்பட துறைகள் முழுவதும் உள்ள நடுத்தர கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் நிதியை வரம்புகள் இல்லாமல் விரிவுபடுத்துகிறது. இந்த நிறுவனம் ₹ 0.10 இலட்சம் முதல் ₹ 8,000 இலட்சம் வரையிலான கடன்களின் மூலதன அளவு, ₹ 350.00 இலட்சத்துக்கும் குறைவான சராசரி மூலதன அளவு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. மார்ச் 31, 2023 நிலவரப்படி, இந்த நிறுவனம் ₹ 450,873.24 இலட்சம் நிலுவையில் உள்ள கடன் சொத்துக்கள் மற்றும் மற்றும் பத்திரங்கள், பத்திரப்படுத்துதல்கள் மற்றும் வணிகத் தாள்களில் ₹ 132,706.77 இலட்சம் முதலீடுகளைக் கொண்டுள்ளது.

மார்ச் 31, 2023, மார்ச் 31, 2022 மற்றும் மார்ச் 31, 2021 ஆகிய தேதிகளுடன் முடிவடைந்த நிதியாண்டுகளில், அதன் போர்ட்ஃபோலியோ வருவாயானது, அதே காலக்கட்டத்தில் சராசரியாக நிலுவையில் உள்ள கடன் மற்றும் முதலீட்டு சொத்துக்களின் ஒரு, சதவீதமாக (மேலே வழங்கப்பட்ட வகைகளில்) முறையே 14.19%, 13.79% மற்றும் 14.00% வட்டி வருவாயைக் குறிக்கிறது. 194 நடுத்தர கார்ப்பரேட் நிறுவனங்கள் , 13.21 இலட்சம் கடன் வாங்குபவர்கள்/வாடிக்கையாளர்கள் இணை கடன் ஒப்பந்தங்களில் மற்றும் 183 MSME மற்றும் MSME அல்லாத விநியோக சங்கிலி நிதிக்காக 24 ஆங்கர்களை உள்ளடக்கி இந்த நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் சொத்துக்கள் மார்ச் 31, 2023 நிலவரப்படி ₹ 583,580.01 இலட்சத்தையும், மார்ச் 31, 2022 நிலவரப்படி ₹ 381,686.09 இலட்சத்தையும் கொண்டுள்ளது.

மார்ச் 31, 2023 நிலவரப்படி, இந்தியாவில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் விவ்ரிட்டி நிறுவனம் ஐந்து பிராந்திய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் சுற்றுச்சூழல் உகந்த மற்றும் சமூக பொறுப்புள்ள நிதி நிறுவனமாக இருக்க முயல்கிறது. மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் நிலையான நீண்ட கால மதிப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. வணிகம், செயல்பாடுகள் மற்றும் மதிப்புச் சங்கிலியில் ESG நடைமுறைகளை பிரதானப்படுத்துவதே இதன் நோக்கமாக இருக்கிறது.

விவ்ரிட்டி, ESG க்கான இடர் மதிப்பீட்டுக் கருவிகளை உருவாக்கியது மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், விவசாயத் துறை போன்றவற்றை உள்ளடக்கிய ESG இல் எங்கள் கவனத்தை விரிவுபடுத்துகிறது.

மறுப்பு:
தேவையான ஒப்புதல்கள், சந்தை நிலவரங்கள் மற்றும் பிற காரணிகளைப் பெறுவதற்கு உட்பட்டு, “விவ்ரிட்டி கேபிடல் லிமிடெட் (முன்னர் விவ்ரிட்டி கேபிடல் பிரைவேட் லிமிடெட் என அறியப்பட்டது) கடனீட்டு வகைகளில் (“NCDகள்”) பாதுகாப்பான, மீட்டெடுக்கக்கூடிய, மாற்ற முடியாத கடனீட்டுப் பத்திரங்களின் பொது வழங்கலை முன்மொழிகிறது. இந்த அறிவிப்பு, எந்தவொரு அதிகார வரம்பிலும், பத்திரங்களை வாங்குவதற்கான வழங்கலாகவோ, பத்திரங்களை வாங்குவதற்கான வழங்கலின் கோரிக்கையாகவோ அல்லது பத்திரங்களைப் பெறுவதற்கான அழைப்பாகவோ இல்லை.

NCD களில் முதலீடு செய்வது ஒரு அளவு ஆபத்தை உள்ளடக்கியது. முதலீட்டாளர்கள் விவ்ரிட்டி கேபிடல் லிமிடெட் (“ப்ராஸ்பெக்டஸ்”) இன் ஆகஸ்ட் 8, 2023 தேதியிட்ட, சென்னையில் உள்ள தமிழ்நாடு நிறுவனங்களின் பதிவாளரிடம் தாக்கல் செய்த, மற்றும் BSE Limited (“BSE”) மற்றும் Securities and Exchange Board of India (“SEBI) ஆகியவற்றில் சமர்ப்பிக்கப்பட்ட ப்ராஸ்பெக்டஸின் பக்கம் 14 இல் தொடங்கும் “ஆபத்து காரணிகள்” என்ற தலைப்பிலான பகுதி உட்பட, வழங்குபவரின் இணையதளங்களில் www.vivriticapital.com , BSE www.bseindia.com , SEBI www.sebi.gov.in மற்றும் முன்னணி மேலாளரின் இணையதளங்கள் www.jmfl.com இல் கிடைக்கும்.