December 12, 2024
  • December 12, 2024
Breaking News
  • Home
  • கல்வி
  • வர்த்தகம்
  • மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ், ஃபிளிப்கார்ட் ஒருங்கிணைப்பில் லாஜிஸ்டிக்ஸ் திறன் மேம்பாடு
September 2, 2023

மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ், ஃபிளிப்கார்ட் ஒருங்கிணைப்பில் லாஜிஸ்டிக்ஸ் திறன் மேம்பாடு

By 0 464 Views
  • மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள், ஒருங்கிணைந்த Line Haul தீர்வுகளுக்காக கூட்டுசேர்கின்றன

செப்டம்பர் 01, 2023: இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மூன்றாம் தரப்பு லாஜிஸ்டிக்ஸ் சேவை வழங்குனர்களில் ஒன்றான மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட், செயல்பாட்டுத் திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தும் மற்றும் புதுமைக்கு இரு நிறுவனங்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த லைன் ஹால் தீர்வுகளுக்காக ஃபிளிப்கார்ட் உடனான தனது கூட்டுசெயல்பாட்டை இன்று அறிவித்தது.

மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ், கனரக வர்த்தக வாகனங்களின் ஒரு பிரத்யேக தொகுப்பு, வழித்தட மேலாண்மை மற்றும் நெட்வொர்க் செயல்பாடுகளில் உதவி மற்றும் ஃபிளிப்கார்ட்டின் முழு இந்திய செயல்பாடுகளுக்கான மேம்பட்ட பகுப்பாய்வுகளை வழங்கும்.

மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம், ஃபிளிப்கார்ட் நிறுவனத்திற்காக, நாடு முழுவதும் பல தேசிய வழித்தடங்களில் இயங்கும் 32 அடி ஒற்றை அச்சு கனரக வணிக வாகனங்களை டெய்ம்லர் இந்தியா கமெர்ஷியல் வெஹிகிள்ஸ் உடன் இணைந்து இயக்கும். பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்புக்கு ஏற்ப, அனைத்து வாகனங்களும் மேம்பட்ட டிரைவர்-உதவி அமைப்புகள் அட்வான்ஸ்ட் டிரைவர் -அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS) மற்றும் பல்வேறு இதர வாகன பாதுகாப்பு மற்றும் ஓட்டுனர் பாதுகாப்பு அத்துடன் வசதி தொடர்பான மேம்பட்ட அம்சங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தால் பயன்படுத்தப்படும் வாகனங்கள் முதன்மையாக மையங்களுக்கு இடையேயான செயல்பாடுகள் மூலம் ஃபிளிப்கார்ட்டின் இ-காமர்ஸ் சரக்கு அனுப்புதல்களை எளிதாக்கும். TAT இன் முன்னேற்றம், அதிக பாதுகாப்பு நிலைகள் மற்றும் வாகனங்கள் மேலாண்மை ஆகியவை இந்திய இ-காமர்ஸ் துறையில் தரத்தை உயர்த்துவதற்கான ஃபிளிப்கார்ட் இன் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகின்றன.

இந்த கூட்டு செயல்பாடு பற்றி கருத்து தெரிவிக்கையில், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ராம்பிரவீன் சுவாமிநாதன், “ஃபிளிப்கார்ட் உடன் இணைந்து இந்த பான்-இந்தியாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட லைன் ஹால் போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்தத் தீர்வுகள், ஃபிளிப்கார்ட் நிறுவனத்திற்கான எங்களது நடப்பு லைன் ஹால் வழங்கல்களை விரிவுபடுத்தி, இதன் மூலம் அவர்களின் மொத்த செயல்பாட்டுச் செலவைக் குறைக்கவும், சேவையை மேம்படுத்தவும் அவர்களுக்கு உதவுகிறது. எங்கள் மேம்படுத்தப்பட்ட வாகன வரிசை மேலாண்மை தரநிலைகள், ஓட்டுநர் ஆரோக்கியம் மற்றும் பன்முகத்தன்மையை மையமாகக் கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டு, செயல்பாட்டுத் தரத்தின் உயர் தரங்களை வழங்க உதவும்.”என்று கூறினார்.

ஃபிளிப்கார்ட் அதன் லைன் ஹால் செயல்பாடுகளின் செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்காக ஒரு உருமாற்றப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் உடனான இந்த கூட்டு செயல்பாடு, ஒருங்கிணைந்த சரக்கு நகர்த்துதலில் நிறுவனத்தின் திறன்களை பயன்படுத்த உதவும்.

ஃபிளிப்கார்ட் குழுமத்தின் கஸ்டமர் எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் ரி காமெர்ஸ் மூத்த துணைத் தலைவரும், சப்ளை செயின் தலைவருமான ஹேமந்த் பத்ரி இந்த கூட்டுசெயல்பாடு பற்றி பேசுகையில், “இந்தியாவின் உள்நாட்டின் இ-காமர்ஸ் சந்தையாக, எங்கள் செயல்பாடுகள் செயல்பாட்டுத் திறனைத் தாண்டி எதிரொலிக்க வேண்டும் மேலும் இந்தியாவில் உள்ள பெரிய விநியோகச் சங்கிலி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் சூழலுக்குப் பயனளிக்கும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் உடனான இந்த கூட்டு செயல்பாடு , எங்கள் நீண்ட தூர இயக்கங்களில் மேம்பட்ட நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனுக்கு உதவும். அவர்களின் பிரத்யேக வாகன வரிசை மேலாண்மை, நிபுணத்துவம் வாய்ந்த வழி மேலாண்மை மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வு ஆகியவை சுமை ஒருங்கிணைப்பின் ஒரு உகந்த வழியை செயல்படுத்தும், பாதை திட்டமிடல் திறமையான, வேகமான மற்றும் நிலையான விநியோகங்களை செயல்படுத்துகிறது.”என்று கூறினார்.

இந்த இணைக்கப்பட்ட வாகனத் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு, வாகனங்களின் செயல் திறனைக் கண்காணிக்க மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் கட்டுப்பாட்டு மையத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த தீர்வு, பணி முடிக்கும் நேரங்கள் மற்றும் சேவை தரத்தை மேம்படுத்த உதவுகிறது, மொத்த செயல்பாடுகளின் செலவு மற்றும் வாடிக்கையாளர் சேவை நிலைகளை குறைக்கிறது.

மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் பற்றி…

மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் ஆனது, ஒரு ஒருங்கிணைந்த மூன்றாம் தரப்பு லாஜிஸ்டிக்ஸ் (3PL) சேவை வழங்குநராகும், இது விநியோகச் சங்கிலி மேலாண்மை மற்றும் நிறுவன இயக்கம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றது. மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் ஆட்டோமொபைல், இன்ஜினியரிங், நுகர்வோர் பொருட்கள் மற்றும் இ-காமர்ஸ் போன்ற பல்வேறு தொழில்களில் 400 க்கும் அதிகமான கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது. இந்த நிறுவனம் ஒரு “asset-light” வணிக மாதிரியைப் பின்பற்றுகிறது, விநியோகச் சங்கிலி மற்றும் மக்கள் இயக்க சேவைகள் முழுவதும் பரவியிருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்ட தீர்வுகளை வழங்குகிறது.

மேலும் தகவலுக்கு, www.mahindralogistics.com ஐப் பார்வையிடவும்.

மஹிந்திரா பற்றி:

1945 இல் நிறுவப்பட்ட இந்த மஹிந்திரா குழுமம், 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 260,000 ஊழியர்களைக் கொண்ட மிகப் பெரிய மற்றும் மிகவும் போற்றப்படும் பன்னாட்டுக் கூட்டமைப்புகளில் ஒன்றாகும். இது இந்தியாவில் விவசாய உபகரணங்கள், பயன்பாட்டு வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதிச் சேவைகள் ஆகியவற்றில் தலைமைப் பதவியைப் பெற்றுள்ளது மற்றும் உலகின் மிகப்பெரிய டிராக்டர் நிறுவனமாகும். இது புதுப்பிக்கத்தக்க ஆற்றல், விவசாயம், பெயர்ச்சியியல், விருந்தோம்பல் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது.

சமூகங்கள் மற்றும் பங்குதாரர்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதை இலக்காக கொண்டு, அவர்கள் உயரும் வகையில். கிராமப்புற செழிப்பு மற்றும் நகர்ப்புற வாழ்க்கையை மேம்படுத்துதல், உலகளவில் ESG ஐ வழிநடத்துதல் ஆகியவற்றில் மஹிந்திரா குழுமம் ஒரு தெளிவான கவனத்தைக் கொண்டுள்ளது.

மஹிந்திராவைப் பற்றி மேலும் அறிய www.mahindra.com / ட்விட்டர் மற்றும் முகநூல் இல்: @MahindraRise/ புதுப்பிப்புகளுக்கு https://www.mahindra.com/news-room க்கு குழுசேரவும்.