விவேக் ஹீரோவாக நடித்திருக்கும் ‘வெள்ளைப்பூக்கள்’ படம் முழுக்க அமெரிக்காவிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் உற்சாகமாக இருந்த விவேக் பேசியதிலிருந்து…
‘வெள்ளைப் பூக்கள்’ படம் மிக நல்லா வந்திருக்கு. இதை முதல்ல பார்க்கப்போற பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு என் அன்பான வேண்டுகோள். படத்தோட கடைசி பத்து நிமிஷத்தை வெளியில சொல்லிடாதீங்க. ஏன்னா, படம் பார்க்க வர்ரவங்களுக்கு அந்த சஸ்பென்ஸ் இருக்கட்டும்.
நான் மத்த ஹீரோக்களோட காமெடி பண்ணிய எல்லா படங்களும் நல்லா ஓடியிருக்கு. நிறைய புதுமுக ஹீரோக்களோட நான் காமெடி பண்ணிய வெற்றிப்படங்களோட ரெகார்ட்ஸும் என்கிட்ட இருக்கு. ஆனா, நான் ஹீரோவான படங்கள் மட்டும் சரியா போகலை. அதுக்குப் பல காரணம்.
என் ‘கேரியர் பெஸ்ட்’ன்னு நான் நினைச்ச ‘நான்தான் பாலா’ ரிலீஸ் ஆனப்ப கமல் சாரோட ‘பாபநாசம்’ வெளியாகி என் படத்தை நாசம் பண்ணிடுச்சு. எல்லா தியேட்டர்களையும் கமல் சாரே எடுத்துக்கிட்டார். சுவர் இருந்தாதானே சித்திரம் எழுத முடியும்…? தியேட்டர் இருந்தாதானே இது நல்ல படம்னு எல்லோருக்கும் காட்ட முடியும்..?
அதுக்காக கமல் சார்தான் என் படம் ஓடாமல் போக காரணம்னு தலைப்பு போட்டு என்னைக் கமல் சாருக்கு வேண்டாதவனா ஆக்கிடாதீங்க. இது தேர்தல் நேரம் வேற…
ஆனா இந்தப்படம் அப்படி ஆகிடாம நிறைய தியேட்டர் எடுத்துத் தர்ரதா புரட்யூசர் வருண் சொல்லியிருக்கார்.
‘வெள்ளைப் பூக்கள்’ படத்தோட டீஸரை ஏ.ஆர்.ரஹ்மான் சார்கிட்ட நட்பு முறையில் காட்டினேன். நல்லா வந்திருக்குன்னு சொன்னார். நானும் இதோட மியூசிக்கையும் நீங்களே பண்ணிக்குடுத்துடுங்கன்னு கேட்டேன். ஒத்துக்கிட்டார்.
ஆனா, அவர் ஷெட்யூலை முடிச்சுட்டு வர்ர வரைக்கும் இவங்களால காத்திருக்க முடியலை. சின்னப் படமில்லையா..? அதனால ராம் கோபாலை வச்சு முடிச்சிட்டோம்..!”