தான் நடித்த படங்களில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை நகைச்சுவை மூலம் சொல்லிி வந்ததால் சின்னக்்் கலைவாணர் என்று அழைக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று 4:45 அளவில் தனியார் மருத்துவமனையில் காலமானார்.
நேற்று முன்தினம் அவர் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்ட நிலையில் நேற்று மாரடைப்பின் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு உயிர் காக்கும் கருவியாக எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டும் அந்த சிகிச்சைகள் பலனின்றி இன்று அதிகாலை இயற்கை எய்தினார்.
இந்த மரணச் செய்தி ஒட்டுமொத்த உலகையே உலுக்கி இருக்கிறது. தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் மக்களின் விழிப்புணர்வுக்காக பிரச்சாரம் செய்து வந்த அவர் திடீரென்று எப்படி இறக்க முடியும் என்பது இன்னும் விடை தெரியாத கேள்வியாகவே இருக்கிறது.
1987ஆம் ஆண்டு கே பாலச்சந்தரால் மனதில் உறுதி வேண்டும் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் விவேக். அதனைத் தொடர்ந்து 34 ஆண்டுகளாக அவர் சினிமாவில் நடித்து வருகிறார்.
தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது, கலைமாமணி மற்றும் 5 தேசிய விருதுகள் பெற்ற அவருக்கு வயது 59.
சென்னை விருகம்பாக்கத்தில் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்களும் சினிமா பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இறுதி சடங்கு மாலை 5 மணிக்கு நடைபெறும்.
30 ஆண்டுகளுக்கு மேல் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவரை கண்ணீரால் வழியனுப்புவோம். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்..!