August 30, 2025
  • August 30, 2025
Breaking News
March 8, 2019

கடாரம் கொண்டானுக்காக சீயான் விக்ரம் பாடினார்

By 0 948 Views
கமல்ஹாசன் வழங்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் ‘கடாரம் கொண்டான்’. 
 
இப்படத்தில் விக்ரமுடன் அக்‌ஷரா ஹாசன் மற்றும் நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது தெரிந்திருக்கும். ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இப்படத்தை இயக்குகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் அனைவரையும் ஈர்த்தது. 
 
ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தின் பாடல்களில் சியான் விக்ரம் ஒரு பாடலை பாடியுள்ளார். 
 
“தீச்சுடர் குனியுமா?
தேடலில் உள்ள வீரனின் உள்ளம் பணியுமா?
ஏறிவா மேலே மேலே”
 
எனத் தொடங்கும் இந்தப் பாடலை விவேகா எழுதியுள்ளார். இந்தப்பாடல் பற்றி இப்படி சிலாகிக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.
 
“கடாரம் கொண்டானுக்காக விக்ரம் சார் பாடிய பாடல் புத்துணர்ச்சி தருவதாக அமைந்துள்ளது. நிச்சயம் இந்தப் பாடல் வெளியானதும் தினமும் நமக்கு உற்சாகம் ஊட்டும் என நம்புகிறேன்..!” 
 
எப்படி சீயான் பாடியிருக்கிறார் என்று பார்க்கலாம் – கேட்கலாம்..!