January 5, 2026
  • January 5, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கடைசி வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி
July 26, 2020

கடைசி வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி

By 0 687 Views

சிறிது காலமாகவே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி அவதூறு சொல்லி நிறைய வீடியோக்களை பகிர்ந்து உள்ளார் நடிகை விஜயலட்சுமி.

அதில் அவர் கூறிய பகிரங்கமான குற்றச்சாட்டை சீமானும் அவர் ஆதரவாளர்களும் தன்னை வாழவிடாமல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதே ஆகும்.

இந்நிலையில் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டு இதுவே தனது கடைசி வீடியோ எனவும் ஏற்கனவே இரண்டு மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று கொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தற்கொலைக்கு முயன்ற அவரை சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

அங்கு அவர் உயிருக்கு பாதகம் இல்லாமல் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

விஜயலட்சுமி வெளியிட்ட கடைசி வீடியோ கீழே…