January 23, 2026
  • January 23, 2026
Breaking News
June 24, 2018

விபத்தில் சிக்கி 3 வார சிகிச்சையில் விஜய் வசந்த்

By 0 1031 Views

விஜய் வசந்த் நடிக்க, ரஞ்சன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் திகில் படமான ‘மை டியர் லிசா’ படப்பிடிப்பு ஊட்டியில் விறு விறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

விஜய் வசந்த் ரவுடிகளுடன் மோதும் சண்டை காட்சி படமாகிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது கால் பள்ளத்தில் சிக்கியதால் தடுமாறி கீழே விழுந்தார். அவரது கால் மீது முழு உடம்பும் அழுத்தியதால் கால் வலியால் துடித்தார்.

உடனடியாக ஊட்டியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட விஜய் வசந்துக்கு உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்கப் பட்டது. படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை செய்யப் பட்டதில் அவரது காலில் முறிவு ஏற்பட்டது தெரிந்து தொடர்ந்து 3 வாரம் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டது.

படப்பிடிப்பும் ஒரு மாதம் தள்ளி வைக்கப் பட்டிருக்கிறது.