தமிழ் படத்துறையில் அஜித்தும் விஜயும் தான் நேரடி போட்டியாளர்கள். சமுதாயப் பணிகளில் கூட இருவரும் ஒருமித்த அளவில்தான் உதவி செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மாநில முதல்வர்களும் பிரதமரும் நிதி திரட்டிக் கொண்டு இருக்க படத்துறையிலும் வறுமையில் வாடும் தொழிலாளர்களுக்கான நிதி திரட்டப்பட்டு கொண்டிருக்க இவர்கள் இருவரும் எதற்கும் நிதி அளிக்காமல் இருந்து வந்தார்கள்.
ஒரு கட்டத்தில் அஜித் முந்திக்கொண்டு பிரதமர் முதலமைச்சர் மற்றும் சினிமா தொழிலாளர்கள் சினிமா பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் ரூ 1.25 கோடி நிதி உதவி செய்தார்.
இதனைத்தடர்ந்து விஜய்யும் நிதி உதவி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் ரூ 1.30 கோடிக்கு நிதி உதவிகளை இன்று அறிவித்திருக்கிறார்.
அதன் விபரம் வருமாறு…
தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம்.
பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம்.
பெப்சி தொழிலாளர் அமைப்புக்கு ரூ.25 லட்சம்.
கேரளா முதலமைச்சர்கள் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம்.
புதுச்சேரி , ஆந்திரா , தெலுங்கானா , கர்நாடகவிற்கு மாநில முதலமைச்சர்கள் நிவாரண நிதிக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி.
விஜய் அறிவித்திருக்கும் நிதியில் மற்ற மாநிலங்களுக்குமான நிதி அமைந்திருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.