October 16, 2025
  • October 16, 2025
Breaking News
August 9, 2019

அறிவிக்கப்படாமல் அடுத்த வாரம் தொடங்கும் விஜய் 64?

By 0 950 Views

அஜித், விஜய்யின் படங்கள் எப்படி இருக்கின்றனவோ அது அடுத்த விஷயம். ஆனால், ஆவை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து படங்கள் வெளியாவது வரை அப்டேட்டுகளும், தொடர் விவாதங்களும் அலப்பறையாக நடக்கும்.

அஜித் படமான ‘நேர் கொண்ட பார்வை’ வெளியாகிவிட, இப்போது விஜய்யின் முறை. அவர் அட்லி இயக்கத்தில் இப்போது நடித்து வரும் ‘பிகில்’ கடைசிக்கட்டத்துக்கு வந்துவிட, அடுத்த படத்தைப் பற்றிய செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.

அப்படி அடுத்து விஜய் நடிக்க இருக்கும் படம் ‘மாநகரம்’, ‘கைதி’ படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் என்பதும், அதற்கு ‘விஜய் 64’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதும் அப்படி வந்த செய்திகள்தான்.

இப்போது அதன் அடுத்தகட்ட அப்டேட்டாக அந்தப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தவாரம் ஆரம்பிக்கப்பட இருக்கிறதாம்.

KIARA ADVANI

KIARA ADVANI

அப்படியானால், விஜய் அடுத்த வாரம் அதில் கலந்து கொள்கிறாரா..? என்றால் “இல்லை…” என்கின்றன தகவல் வட்டாரங்கள். ‘பிகில்’ முற்றாக முடிந்து விஜய் அதிலிருந்து வெளியே வரும் வரை மற்ற நடிக நடிகையரை வைத்து லோகேஷ் இயக்கிக் கொண்டிருப்பாராம். கடைசியாக விஜய் வந்ததும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் விறுவிறுவென நடைபெறும் என்கிறார்கள்.

சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இந்தப்படத்துக்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார் என்பதும், அதில் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட்டிலிருந்து ‘கியாரா அத்வானி’யை அழைத்து வருகிறார்கள் என்பதும் கூட இன்னும் அறிவிக்கப்படாத தகவல்கள்.

வரும் கோடை விடுமுறையைக் குறிவைக்கும் இந்தப்படத்தில் விஜய் ஒரு கேங்க்ஸ்டராக வருகிறாராம்.

இன்னொருமுறையும் போலீஸாக வராத வரை ஓகே..!