November 15, 2025
  • November 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பிரபல மலையாள கதாசிரியர் இயக்குனர் டென்னிஸ் ஜோசப் மரணம்
May 10, 2021

பிரபல மலையாள கதாசிரியர் இயக்குனர் டென்னிஸ் ஜோசப் மரணம்

By 0 502 Views

பிரபல மலையாள சினிமா கதாசிரியரும் டைரக்டருமான டென்னிஸ் ஜோசப் காலமானார். ஜோஷியின் டைரக்ஷனில் வெளியான நாயர்ஸாப், நியூடெல்லி, கோட்டயம் குஞ்சப்பன், No.20. மெட்ராஸ் மெயில், சங்கம் உட்பட ப ட ஹிட் படங்களின் கதாசிரியர்.

‘அதர்வம் ‘ படத்தில் சில்க்கை கிராமிய தமிழ்ப் பெண்ணாக நடிக்க வைத்தவர்.

‘ மனு அங்கிள் ‘ படத்துக்காக தேசிய விருது பெற்றவர். 40.க்கும் மேற்பட்ட மலையாள சூப்பர் ஹிட் படங்களின் கதாசிரியர். கதைக்காக அதிக சன்மானம் பெற்ற கதாசிரியர்.

இவரது கதையில் மாதவியின் நடிப்பில் வெளியான “ஆகாச தூது” சினிமா பார்த்து அழாதவர்கள் இருக்க முடியாது. இவரது கதைகள் எல்லாமே நுட்பமான ஆனால் வணிக ரகம்.

இன்று காலமான டென்னிஸ் ஜோசப்புக்கு நம் அஞ்சலி.