August 31, 2025
  • August 31, 2025
Breaking News
July 14, 2020

என் புகார் என்ன ஆச்சு – போலீசிடம் வனிதா கேள்வி

By 0 645 Views

நடிகை வனிதா விஜயகுமார் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை கடந்த மாதம் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரைை திருமணம் செய்து கொண்டார்.

இதுகுறித்து சூர்யா தேவி என்ற பெண் சமூக வலைத்தளத்தில் வனிதா விஜயகுமார் பற்றி அவதூறாக பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 7ஆம் தேதி போரூர் காவல் நிலையத்தில் வனிதா விஜயகுமார் புகார் ஒன்றை அளித்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் அதுகுறித்து கேட்பதற்காக இன்று தனது வக்கீலுடன் போரூர் காவல் நிலையத்திற்கு வந்து காவல் அதிகாரிகளுடன் பேசி விட்டு வெளியே வந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில் தன்னைக் குறித்து அவதூறாக பேசிய பெண் குறித்து போலீசாரிடம் தெரிவித்து உள்ளதாகவும் , தற்போது கரோனா காலம் என்பதால் இரண்டு நாட்களில் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்…” என்று பதிலளித்தார் அவர்.