January 24, 2026
  • January 24, 2026
Breaking News
  • Home
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • வைரமுத்து படைப்புலகம் பன்னாட்டுக் கருத்தரங்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
November 29, 2024

வைரமுத்து படைப்புலகம் பன்னாட்டுக் கருத்தரங்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

By 0 494 Views

*கவிப்பேரரசு வைரமுத்து படைப்புலகம் பன்னாட்டுக் கருத்தரங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு*

கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைக்கு வயது 52. அவரது திரைப்பாட்டுக்கு வயது 44. இதுவரை 39 நூல்கள் எழுதியிருக்கிறார். சாகித்ய அகாடமி விருதுபெற்ற இவரது கள்ளிக்காட்டு இதிகாசம் 10 இந்திய மொழிகளில் பெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது; மேலும் 12 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்காக 7 ஜனாதிபதிகளிடம் விருது பெற்றிருக்கிறார். இவரது படைப்புகளை ஆராய்ச்சி செய்து இதுவரை 180 பேர் டாக்டர் பட்டமும், எம்.பில் பட்டமும் பெற்றிருக்கிறார்கள். இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

கவிப்பேரரசு வைரமுத்து படைப்புகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் நடைபெறுகிறது. உலகெங்கிலுமிருந்தும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும், ஆராய்ச்சி அறிஞர்களும் கலந்துகொண்டு கட்டுரை வாசிக்கிறார்கள்.

கருத்தரங்கம் முழுநாள் நிகழவிருக்கிறது. மாலையில் நிகழும் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.