சின்னத்திரை நடிகைகளில் பல ரேகாக்கள் உள்ளனர். அதில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடித்து வரும் ஒரு ரேகாவின் கணவர் கோபிநாத் என்பவர் கடன் தொல்லை மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக கிறிஸ்துமஸ் அன்று அண்ணாநகரில் தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி நேற்று காலை வேகமாக பரவியது.
இது ஒருபக்கம் இருக்க, கோபிநாத்தின் மனைவியாக வேறு ரேகாவின் புகைப்படம் சில மீடியாக்களில் வர, அதைப் பார்த்து பலர் அந்த ரேகாவிடம் துக்கம் விசாரிக்க ஆரம்பித்துவிட… “அந்த ரேகா நான் இல்லை, அவர் வேறு ரேகா…” என்று வதந்தியால் பாதிக்கப்பட்ட நடிகை ரேகா வீடியோ மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
“வதந்திகளில் கூறப்படும் ரேகாவான எனக்கும் என் கணவருக்கும் எதுவும் நடக்கவில்லை. மற்றும் பரவும் செய்தி முற்றிலும் தவறானது என்றும் அது வேறு ஒரு ரேகாவின் கணவர். அதுவும் பொய்யாக கூட இருக்கலாம்…” என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
சீரியலுக்கும், சினிமாவுக்கும் ஒரே டைட்டில் வைக்கும் சின்னத்திரை கலாச்சாரத்தில் ஒரே பெயர் கொண்ட நடிகைகளின் ஆதிக்கம் வேறு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. கீழே வதந்தி புகழ் ரேகா வீடியோ…