January 15, 2025
  • January 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சுஷாந்த் சிங்கை தொடர்ந்து பிரபல டிவி சீரியல் நடிகர் தூக்கிட்டு தற்கொலை
August 6, 2020

சுஷாந்த் சிங்கை தொடர்ந்து பிரபல டிவி சீரியல் நடிகர் தூக்கிட்டு தற்கொலை

By 0 551 Views

இந்திப்பட உலகுக்கு மட்டும்தான் என்றில்லை இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் நேரம் சரியில்லை என்றுதான் கொள்ள வேண்டும்.

சமீபத்தில்தான் ஹிந்தி சினிமாவின் புகழ்பெற்ற இளைய நட்சத்திரம் சுஷாந்த் சிங் ராஜ்புத் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிகழ்வு பாலிவுட்டில் மிகப் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியதோடு இன்றுவரை அவரது தற்கொலைக்கான காரணம் விளங்கவிலலை.

இந்நிலையில் பிரபல இந்தி டிவி சீரியல் நடிகர் சமீர் ஷர்மா தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள்ளார். மலாட் வெஸ்ட்டிலுள்ள அவரது வீட்டின் சமையல் அறையில் தூக்கிட்ட நிலையில் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அவருடைய உடல் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை விசாரித்து வரும் மலாட் போலீஸார், சமீர் ஷர்மா இறந்து இரண்டு நாட்களாகியிருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர்.

டிவி சீரியல்களில் புகழ்பெற்ற சமீர் சர்மாவுக்கு இந்த சோகம் வெறும் 44 வயதில் நேர்ந்திருக்கிறது.

தற்கொலைகள் தொடர் நிகழ்வுகளாகி வருவது மிகவும் வருததத்துக்கு உரியது.