February 15, 2025
  • February 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நீதிமணி மோசடி வழக்கு விசாரணையில் ஞானவேல் ராஜா ராமநாதபுரம் டி எஸ் பி அலுவலகம் வந்தார்
August 7, 2020

நீதிமணி மோசடி வழக்கு விசாரணையில் ஞானவேல் ராஜா ராமநாதபுரம் டி எஸ் பி அலுவலகம் வந்தார்

By 0 880 Views

ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக சென்னையைச் சேர்ந்த நீதிமணி, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஆனந்த் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

தனியார் நிதி நிறுவன மோசடி பணத்தை சென்னையைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் கொடுத்ததாக நீதிமணி வாக்குமூலம் அளித்துள்ளார். காட்சி ஊடகத்துறையினர் தன்னிடம் பணத்தைப் பறித்துச் சென்றதாக ஆனந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நீதிமணி வாக்குமூலத்தை அடுத்து சேலத்தைச் சேர்ந்த சிவா, சென்னை தி.நகர் தணிகாசலம் சாலை பகுதியைச் சேர்ந்த ஞானவேல்ராஜா, சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் ஆகியோருக்கு விசாரணைக்கு வருமாறு ராமநாதபுரம் நகர் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் சம்மன் அனுப்பிவைக்கப்பட்டது.

ஆஜராவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஞானவேல்ராஜா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், காவல்துறை விசாரணைக்கு நேரில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஆஜராகவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால், தனியார் நிதிநிறுவன மோசடி வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வியாழக்கிழமை ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வியாழக்கிழமை காலை முதல் மாலை வரையில் திரைப்படத் தயாரிப்பாளர்களோ அல்லது அவர்கள் சார்பில் வழக்குரைஞர்களோ யாரும் ஆஜராகவில்லை என காவல் துணைக் கண்காணிப்பாளர்
அலுவலக்தில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து துணைக் கண்காணிப்பாளர் கி. வெள்ளத்துரையிடம் கேட்டபோது, ” ஞானவேல்ராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன்ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. ஆகவே அவர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே ஆஜராகலாம்.

அவரைத் தவிர சிவா உள்ளிட்ட இருவர் தரப்பிலும் பதில் இல்லை. ஆகவே அவர்களுக்கு விளக்கம் கோரி மீண்டும் சம்மன் அனுப்ப சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது…” என்றார்.

இந்நிலையில் இன்று மாலை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ராமநாதபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி வெள்ளைத்துரை முன்னிலையில் தனது வழக்கறிஞர் பாரதியுடன் ஆஜரானார்.

இதுகுறித்து ஞானவேல் ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது, ” எனது மகாமுனி திரைப்படத்தின் விநியோக உரிமையை வாங்கிய நீதிமணி பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக எனது தரப்பில் உள்ள தகவல்களை பெற போலீஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். எனக்கும் இந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை…” என்றார்.