July 27, 2024
  • July 27, 2024
Breaking News
  • Home
  • பல்சுவை
  • கேரளாவில் அதிகம் தெரியாத மலைவாசஸ்தலம்
March 21, 2018

கேரளாவில் அதிகம் தெரியாத மலைவாசஸ்தலம்

By 0 1938 Views

கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாதான் தென்னக மாநிலங்களிலேயே சுற்றுலாவுக்குச் சிறந்த இடமாகக் கருதப்படுகிறது. ஆனால், வழக்கமாக கேரளா என்றாலே வயநாடு, ஆலப்புழை, மூணாறு முதலான இடங்கள்தான் நினைவுக்கு வரும்.

ஆனால், நமக்கு அதிகம் தெரியாமல் இருக்கும் ஒரு இடத்தை அங்கே சென்று வந்தவர்கள் புகழ்கிறார்கள். அந்த இடம் பீர்மேடு.

கோட்டயம் நகருக்கு கிழக்கே 75 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் பீர்மேடு, கேரளாவில் அதிகமாக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வெளியே தெரியாத மலைவாசஸ்தலங்களில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

திரிவிதாங்கூர் சமஸ்தானத்துடன் நெருங்கிய தொடர்பிலிருந்த பீர் முஹம்மத் எனும் சூஃபி ஞானியின் பெயரிலிருந்து பீர்மேடு என்ற பெயரை பெற்றதாம்.. பீர்மேடு நகரம் கடல் மட்டத்திலிருந்து 915 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்த நகரம் ஒரு காலத்தில் திரிவிதாங்கூர் ராஜ வம்சத்தின் கோடை கால வாசஸ்தலமாக இருந்து வந்ததுள்ளது.

kerala tourist spot

peer medu, kerala tourist spot

அந்த ராஜ வம்சத்தினரின் கோடை கால வசிப்பிடம் தற்போது அரசு விருந்தினர் இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. பீர்மேடு நகருக்கு நீங்கள் சுற்றுலா செல்லும்போது தேயிலை, ஏலக்காய், ரப்பர் மற்றும் காப்பி தோட்டங்கள் மலைக்குன்றுகளில் பல ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து பிரம்மாண்டமாக காட்சியளிப்பதைப் பார்த்து ரசிக்கலாம்.

அங்கு செல்லும்போது அருகிலுள்ள பெரியார் புலிகள் பாதுகாப்பு காடுகளுக்கும் சென்று வரலாம். தேவதாரு மரங்கள் அடர்ந்த காடுகள், அழகிய அருவிகள், பல்வேறு வனவிலங்கு சரணாலயங்களுடன் இயற்கை காதலர்களின் விருப்பமான சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வரும் பீர்மேடு நகரம் ஆண்டு முழுவதும் இதமான வானிலையையே கொண்டிருப்பது சிறப்பு.

ஆனால், மழைக்காலங்களில் மட்டும் இங்கே செல்வதைத் தடுத்து விடுங்கள். மழைக் காலங்களில் கடும் மழைப் பொழிவு இருக்குமாம்.