March 24, 2023
  • March 24, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • மலேசியாவில் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு வந்த எம்ஜிஆர் கள்
August 30, 2020

மலேசியாவில் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு வந்த எம்ஜிஆர் கள்

By 0 427 Views

நேற்று முன்தினம் மலேசிய நாட்டிலுள்ள கோலாலம்பூர், பெட்டலிங் ஜெயா, கெலாங், காஜாங், ஜொகூர் பாகு, ஈப்போ, பட்டர்ஒர்த் ஆகிய இடங்களில் ‘லோட்டஸ்’ குழுமத்தின் 11 அரங்குகளில் டிஜிட்டல் வடிவத்திலான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் திரையிடப்பட்டது.

பெட்டலிங் ஜெயா லோட்டஸில் சமூக இடைவெளியுடன் அரங்கு நிறைந்து காணப்பட்டது. லோட்டஸ் குழுமத்தின் அதிபர் ‘டத்தோ’ திரு ராமலிங்கம் படம் காண வந்தவர்களை வரவேற்றார்.

எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அவருக்கு மாலையணிவித்து மகிழ்ந்தனர்.

மலேசியாவில் எம்.ஜி.ஆர்.தோற்றத்தில்
பிரபலமான நடிகர்கள் ஹரி (திருமதி லதாவுடன் ‘வாலிபன் சுற்றும் உலகம்’ படத்தில் ஜோடியாக நடித்தவர்), விஜய சேகர், சுரேஷ், தேவா, குணா ஆகியோர் எம்ஜிஆர் மேக்கப்பி லேயே வந்திருந்து சிறப்பித்தனர்.

எம்ஜிஆர் படத்துக்கு வந்த எம் ஜி ஆர் கள் ரசிகர் களை நிறையவே கவர்ந்தனர்.